சென்னை மேயர் வேட்பாளர் யார்?.. லிஸ்டில் 15 பெண் வேட்பாளர்கள்.. திமுக டிக் அடிப்பது யாரை? – Oneindia Tamil

சென்னைச் செய்திகள்

சென்னை: சென்னையில் திமுக கூட்டணி மாஸ் வெற்றியை பெற்றுள்ளதால் அதன் மேயர் வேட்பாளர் யாராக இருக்கும் என்ற கேள்வியும் எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடந்து முடிந்த நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல், அதாவது மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கான தேர்தல் கடந்த 19ஆம் தேதி நடந்து முடிந்தது.

இந்த தேர்தலில் தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என மொத்தம் 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும் அவற்றில் உள்ள 12,838 வார்டுகளுக்கும் தேர்தல் நடத்தப்பட்டது. இதன் வாக்கு எண்ணிக்கை நேற்று நடைபெற்றது.

ஆரம்பிச்சாச்சு.. தேர்தல் முடிந்த கையோடு அதிமுகவிற்கு முதல் அதிர்ச்சி.. திமுக கையில் விழுந்த லட்டு!ஆரம்பிச்சாச்சு.. தேர்தல் முடிந்த கையோடு அதிமுகவிற்கு முதல் அதிர்ச்சி.. திமுக கையில் விழுந்த லட்டு!

21 மாநகராட்சிகள்

இந்த தேர்தலில் திமுக 21 மாநகராட்சிகளை கைப்பற்றி அமோக வெற்றி பெற்றது. சென்னையில் 153 வார்டுகளை தன்வசமாகியது. அதிமுக 15 இடங்களை கைப்பற்றியது. திமுக கூட்டணி கட்சியான காங்கிரஸ் 13 இடங்களில் வென்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 4 இடங்களையும் சிபிஐ பாஜக தலா ஒரு இடத்திலும் வென்றது.

200 வார்டுகளில் 50 சதவீதம்

விடுதலை சிறுத்தைகள் 4 இடங்களிலும், ம.தி.மு.க. 2 இடங்களிலும், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலா ஒரு இடங்களிலும், சுயேட்சை 5 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. இந்த நிலையில் சென்னையில் உள்ள 200 வார்டுகளில் 50 சதவீதம் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

மேயர் தேர்தல்

மறைமுகமாக வரும் மார்ச் 4 ஆம் தேதி மேயர் தேர்தல் நடைபெறுகிறது. இதில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் ஒருமனதாக 21 மாநகராட்சிகளுக்கான மேயர்களை தேர்வு செய்வர். அந்த வகையில் தமிழகத்தின் தலைநகரான சென்னையின் மேயராக யார் இருப்பார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது.

சென்னையின் பெண் மேயர்கள்

சென்னைக்கு மேயர்களாக கடந்த 1957- 1958 ஆம் ஆண்டு வரை தாரா செரியன், 1971- 1972 ஆம் ஆண்டு காமாட்சி ஆகியோர் இரு பெண்கள் மேயர்களாக இருந்துள்ளனர். ஆனால் பட்டியலினத்தை சேர்ந்த பெண் ஒருவர் சென்னை மேயராக வந்தால் அது இதுவே முதல் முறையாகும். அந்த வகையில் சென்னை மாநகராட்சிக்குள்பட்ட வார்டுகளில் போட்டியிட்டு வென்ற திமுக கூட்டணியின் வேட்பாளர்களில் மேயர் பதவிக்கு திறமையானவர்களின் பட்டியல் யூகத்தின் பேரில் வெளியாகியுள்ளது.

15 மேயர் வேட்பாளர்களின் லிஸ்ட்

வார்டு 28 ஐ சேர்ந்த கனிமொழி (38), வார்டு 31 ஐ சேர்ந்த சங்கீதா (36) (காங்), வார்டு 46 ஐ சேர்ந்த ஆனந்தி (46), வார்டு 47 ஐ சேர்ந்த அ மணிமேகலை (52), வார்டு 52 ஐ சேர்ந்த கீதா சுரேஷ் (42), வார்டு 53 ஐ சேர்ந்த வேளாங்கண்ணி (62), வார்டு 59 ஐ சேர்ந்த சரஸ்வதி (57), வார்டு 70 ஐ சேர்ந்த ஸ்ரீதானி (29), வார்டு 74 ஐ சேர்ந்த ஆர் பிரியா (28), வார்டு 77 ஐ சேர்ந்த சுமகி – 36 (காங்), வார்டு 85 ஐ சேர்நத பொற்குடி (45), வார்டு 111 ஐ சேர்ந்த நந்தினி (36), வார்டு120 ஐ சேர்ந்த ஆர் மங்கை (திமுக), வார்டு 135 ஐ சேர்ந்த ஆர் சாந்தி (விசிக- வயது 48), வார்டு 159 ஐ சேர்ந்த எஸ் அமுத பிரியா (49) ஆகியோரின் பெயர்கள் லிஸ்டில் உள்ளன.

யார் மேயர் வேட்பாளர்?

இந்த 15 பேரில் திமுக தலைமை யாரை மேயர் வேட்பாளராக அறிவிக்கும் என்பது தெரியவில்லை. சென்னை மேயர்களாக முதல்வர் ஸ்டாலினும் அமைச்சர் மா சுப்பிரமணியனும் சிறப்பாக செயல்பட்டுள்ளனர். சிங்கார சென்னை திட்டத்தை செயல்படுத்த பாடுபட்டனர். அந்த வகையில் திறமையான வேட்பாளர் மேயர் வேட்பாளராக அறிவிக்கக் கூடும் என தெரிகிறது. சென்னையில் லேசான மழை பெய்தாலே சாலைகள் மோசமாகி தண்ணீர் தேங்குகின்றன. இந்த பிரச்சினைகளை எல்லாம் சமாளிக்கும் திறமை கொண்டவர் விரைவில் அறிவிக்கப்படுவார் என சொல்கிறார்கள்.

English summary
DMK has 15 mayor candidates in Chennai. Here are list of powerful candidates.

Source: https://tamil.oneindia.com/news/chennai/dmk-has-15-mayor-candidates-in-chennai-do-you-know-who-it-will-be-449715.html