ஒரு ரூபாய்க்கு நாப்கின்… சென்னை புத்தகக் கண்காட்சியில் மக்கள் மருந்தகம்! – Indian Express Tamil

சென்னைச் செய்திகள்

சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடைபெறும் புத்தகக் கண்காட்சி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இங்கு புத்தக ஸ்டால்களுக்கு மத்தியில் மத்திய அரசு மருந்தகம் இருக்கிறது. அங்கே ஒரு ரூபாய்க்கு வழங்கப்படும் சானிட்டரி நாப்கின் பலரது கவனத்தை ஈர்க்கிறது.

சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடைபெறும் புத்தகக் கண்காட்சி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இங்கு புத்தக ஸ்டால்களுக்கு மத்தியில் மத்திய அரசு மருந்தகம் இருக்கிறது. அங்கே ஒரு ரூபாய்க்கு வழங்கப்படும் சானிட்டரி நாப்கின் பலரது கவனத்தை ஈர்க்கிறது.

அந்த மருந்தகத்தை நடத்திவரும் கிருஷ்ணமூர்த்தியிடம் (மருந்தாளர், மத்திய அரசின் மக்கள் மருந்தகம்) இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் சார்பில் பேசினோம். அவர் கூறுகையில்:

“உரம் மற்றும் ரசாயன துறையிலிருந்து தயாரிக்கப்படுகிற மருந்துகளை இங்கு விற்பனை செய்கிறோம். இங்கு விற்பனை செய்யப்படும் அனைத்து பொருட்களும் NABLஆல் சோதனையில் உட்படுத்தப்பட்டு, WHOஆல் அங்கீகாரம் செய்யப்பட்ட மருந்துகள் ஆகும்.

கிருஷ்ணமூர்த்தி (மருந்தாளர், மத்திய அரசின் மக்கள் மருந்தகம்)

மற்ற கடைகளில் 3000 ரூபாய்க்கு வாங்கும் பொருட்களை இங்கு நீங்கள் 600 ரூபாய்க்கு பெற்றுக்கொள்ளலாம். எல்லா விதமான மருந்துகள் மற்றும் அறுவை சிகிச்சைக்கு தேவையான பொருட்களும் இங்கு கிடைக்கும்.

மேலும், சானிட்டரி நாப்கினை ஒரு ரூபாய்க்கு விற்பனை செய்யும் இந்த திட்டம் மக்களின் இடையே பெரும் வரவேற்பை பெறுகிறது. இந்த மருந்துகள் நல்ல தரத்தில் இருப்பதாக மக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

சென்னை புத்தக கண்காட்சியில் விற்பனையகம் வைப்பதில் இதுவே முதல் முறை. புற்றுநோயியல் நிபுணரான டாக்டர் அனிதா ரமேஷ், ஒரு தன்னார்வு மூலமாக இந்த முயற்சியை முன்னெடுத்து மக்களுக்கு விழிப்புணர்வு அளிக்க வேண்டும் என்று, இந்த விற்பனையகத்தை ஏற்பாடு செய்துகொடுத்தார்.” என்று கூறுகிறார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Source: https://tamil.indianexpress.com/lifestyle/one-rupee-napkin-available-at-chennai-book-fair/