`வீட்டுல பாசம்; தேர்தல்ல எதிரும் புதிரா இருந்தோம்!’ – கவுன்சிலர்களாகும் சென்னை அக்கா-தம்பி – Vikatan

சென்னைச் செய்திகள்

சட்டமன்ற, நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் எப்படி இருந்தாலும், உள்ளாட்சித் தேர்தலில் ஆளுங்கட்சியே வெற்றி வாகை சூடும் என்பது அரசியலில் எழுதப்படாத விதி. அதுபோலவே, அண்மையில் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் ஆளுங்கட்சியான தி.மு.க பெரும் வெற்றி பெற்றது. இந்த உள்ளாட்சித் தேர்தலில், முக்கிய அரசியல் கட்சிகளின் சார்பிலும், சுயேச்சைகளாகப் போட்டியிட்டும், கணவன் – மனைவி, அம்மா – மகள், அப்பா – மகன் உட்பட ஒரே குடும்பத்தில் ஒன்றுக்கும் மேற்பட்டோர் கவுன்சிலர்களாக ஜெயித்து கவனம் ஈர்த்தனர்.

தேர்தல் பிரசாரத்தில் சங்கீதா

அந்த வகையில் சென்னை மாநகராட்சியின் 32-வது வார்டில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் சங்கீதா பாபு வெற்றி பெற்றுள்ளார். இவரின் உடன்பிறந்த தம்பி ராஜன் பர்ணபாஸ், 23-வது வார்டில் சுயேச்சையாகப் போட்டியிட்டு வென்றிருக்கிறார். இவர்களின் பெற்றோர் இருவரும் ஏற்கெனவே கவுன்சிலர்களாக இருந்துள்ளனர். பாசமலர்கள் இருவரும் தற்போது மாமன்ற உறுப்பினர்களாக அடியெடுத்து வைக்கவிருப்பது குறித்து, சங்கீதாவிடம் பேசினோம்.

Source: https://www.vikatan.com/news/tamilnadu/chennai-siblings-won-the-local-body-election