எகிறுது! சென்னை உள்ளிட்ட 8 நகரங்களில் வீடுவிலை கிடுகிடு உயர்வு – Asianet News Tamil

சென்னைச் செய்திகள்

New Delhi, First Published Feb 28, 2022, 4:25 PM IST

சென்னை, மும்பை, டெல்லி, கொல்கத்தா, பெங்களூரு உள்ளிட்ட 8 முக்கியநகரங்களில் வீட்டின் விலை 3 % முதல் 7%வரை அதிகரி்த்துள்ளது என ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சிமெண்ட், உருக்கு உள்ளிட்ட உள்ளீட்டுப்பொருட்களின் விலை உயர்ந்ததால், வீடுகளின்விலையும் உயர்ந்துள்ளது.

“ரியல் இன்சைட் ரெசிடென்சியல்-ஆண்டு அறிக்கை2021” என்ற தலைப்பில் பிராப் டைகர்.காம் ஆய்வு நடத்தி வெளியிட்டுள்ளது. இதில் கடந்த 2021ம் ஆண்டு வீடுகளின் விற்பனை 13 சதவீதம் உயர்ந்துள்ளது. கடந்த 2020ம் ஆண்டில் ஒரு லட்சத்து 82ஆயிரத்து 639 வீடுகள் விற்பனையான நிலையில், கடந்த ஆண்டில் 2 லட்சத்து 5ஆயிரத்து 936 வீடுகள் விற்பனையாகின.

Housing prices rise by 3%7% in 8 cities

கொரோனா 2-வது அலையிலிருந்து மெல்லரியல்எஸ்டேட் துறை மீண்டு வருகிறது. இதில் அகமதாபாத், ஹைதராபாத்தில் வீடுகளின் விலை 7% அதிகரித்துள்ளது. பெங்களூருவில் 6 %,  புனேயில்3%, மும்பையில் 4% விலை அதிகரித்துள்ளன. சென்னை, டெல்லி என்சிஆர், கொல்கத்தா நகரங்களில் வீடுகளின் விலை 5% அதிகரித்துள்ளது.

சென்னையில் கடந்த 2020ம் ஆண்டு 10,542 வீடுகள் விற்பனையானநிலையில், கடந்த ஆண்டு 25% விற்பனை அதிகரி்த்து 13,055 வீடுகள் விற்பனையாகின. டெல்லி என்சிஆர் பகுதியில் கடந்த ஆண்டு வீடுகள் விற்பனை ஒரு சதவீதம் மட்டுமே அதிகமாகி, 17,907 வீடுகள்தான் விற்பனையாகின.

Housing prices rise by 3%7% in 8 cities

ஹைதராபாத்தில் வீடுகள் விற்பனை 36 சதவீதம் அதிகமாகி 22,239 வீடுகள் விற்பனையாகின. கடந்த 2020ம் ஆண்டில் 16,400வீடுகள்தான் விற்றிருந்தன. கொல்கத்தாவில் வீடுகள் விற்பனை 9%, மும்பையில் 8%, புனேயில் 9 % வீடுகள் அதிகமாக விற்பனையாகின. 

ஆக்சிஸ் கார்ப்பரேட் நிறுவனத்தின் இயக்குநர் ஆதித்யா குஷ்வாலா கூறுகையில் “ மத்திய அரசின் கொள்கை முடிவுகள், குறைந்த அளவு வட்டி போன்றவை வீடுகள் விற்பனை அதிகமாகக் காரணம். வீடுகளுக்கான தேவை படிப்படியாக அதிகரித்து வருகிறது. அதிலும் சொகுசான, அதிக அறைகள் கொண்ட வீடுகளுக்கு தேவை இருக்கிறது”எ னத் தெரிவித்தார்

Last Updated Feb 28, 2022, 4:25 PM IST

Source: https://tamil.asianetnews.com/business/housing-prices-rise-by-3-7-in-8-cities-r80h0w