சென்னை மாநகராட்சி வரலாற்றில் 3-வது பெண் மேயர்! – யார் இந்த பிரியா ராஜன்? – Vikatan

சென்னைச் செய்திகள்

சென்னை மாநகராட்சி துணை மேயர் பதவிக்கு தி.மு.க வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கும் மகேஷ்குமார், சைதை பகுதியில் வரும் தாடண்டன் நகர், சின்னமலை உள்ளிட்ட பகுதிகளை உள்ளடக்கிய 169-வது வார்டு கவுன்சிலர். இவர் மாமனார் பவளவண்ணன், சைதை பகுதியில் பிரபலமான அரசியல் பிரமுகர். அவர் பெயரைத்தான், ஜோன்ஸ்ரோடு சுரங்கப்பாதைக்கு வைத்தாராம் அந்த காலகட்டத்தில் தமிழக முதல்வராக இருந்த கருணாநிதி. பாரம்பர்ய தி.மு.க குடும்பத்தைச் சேர்ந்தவர் மகேஷ். இவர், 2006-ல் உறுப்பினராகப் பதவியிலிருந்தவர். இடையில் ஒருமுறை, சைதை சட்டமன்றத் தொகுதியில் தி.மு.க. சார்பில் எம்.எல்.ஏ-வாக போட்டியிட்டு தோற்றவர். தற்போதைய சைதை சட்டமன்றத் தொகுதியின் எம்.எல்.ஏ-வும் சுகாதாரத்துறை அமைச்சருமாக இருப்பவர் மா.சுப்ரமணியன். சைதை பகுதி தி.மு.க-வில் மா.சு-வுக்கும் மகேஷுக்கும் பனிப்போர் நிலவுவதாகச் சொல்வதுண்டு. ஆனால், வெளிப்படையாக போஸ்டரில் பெயர் போடுவது, மேடைப்பேச்சுகள் என்று மோதிக்கொண்டதில்லை. இருவருக்கும் கருத்துவேறுபாடுகள் உண்டாம். துணை மேயர் பதவிக்கான ரேஸில் மகேஷ் இறங்கியபோது, அவருக்கு க்ளீன் சிக்னல் காட்டினார் மா.சு.

மகேஷ்குமார்

மகேஷுடம் நாம் பேசியபோது, “சென்னையைச் சிங்கார சென்னை ஆக மாற்றவேண்டும் என்பது எங்கள் தலைவரின் கனவு. கடந்த 10 வருடங்களில் அ.தி.மு.க. ஆட்சியிலிருந்தபோது சென்னையில் வெள்ள பாதிப்புகளைச் சரிசெய்ய எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை ஏன்? அடிப்படை வசதிகளைக் கூடச் செய்யவில்லை. தி.மு.க ஆட்சியில் அமர்ந்ததும், வெள்ள பாதிப்பு வந்தது. தமிழக முதல்வர், சென்னையில் தண்ணீர் தேங்கிக்கிடந்த அனைத்து பகுதிகளையும் நேரடியாக பார்வையிட்டார். வெள்ளபாதிப்புகளை சரிசெய்யவும், கடலில் வீணாக நோய் சேரும் தண்ணீரைச் சேமித்து மக்களுக்குப் பயன்படும் வகையில் நிரந்தர திட்டங்களை உருவாக்கச் சொல்லி நிபுணர் குழுவை அமைத்து அறிக்கை கேட்டிருக்கிறார். அந்தக் குழுவின் பரிந்துரையைக் கேட்டு, மழைநீர் தேங்காத சென்னையாக ஆக்குவதுதான் என் முதல் லட்சியம்” என்று கூறினார்.

Source: https://www.vikatan.com/government-and-politics/politics/third-female-mayor-of-chennai-corporation-who-is-this-priya-rajan