இன்று முதல் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பிய சென்னை மெட்ரோ ரயில் – Puthiya Thalaimurai

சென்னைச் செய்திகள்

சென்னையில் இன்று முதல் வாரத்தின் அனைத்து நாட்களிலும் காலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட உள்ளன.

தமிழகத்தில் கொரோனா ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பிறகு சென்னையில் மெட்ரோ ரயில்கள், வார நாட்களில் காலை 5.30 மணி முதல் 11 மணி வரையும், ஞாயிற்றுக்கிழமையில் காலை 7 மணி முதல் 10 மணி வரையும் இயக்கப்பட்டு வந்தன. இந்த நிலையில், பொதுமக்கள் மற்றும் மெட்ரோ ரயில் பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு, இன்று முதல் அனைத்து நாட்களிலும் காலை 5 மணியில் இருந்து இரவு 11 மணி வரை மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

[embedded content]

Advertisement

சென்னை மெட்ரோ நிர்வாகம் அளித்திருக்கும் தகவலின்படி, `இனி திங்கள் முதல் சனிக்கிழமை வரை, நெரிசல் மிகுந்த நேரங்களில், 5 நிமிட இடைவெளியிலும், மற்ற நேரங்களில் 10 நிமிட இடைவெளியிலும் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும். ஞாயிற்றுக்கிழமை மற்றும் அரசு பொது விடுமுறை நாட்களில் 10 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில் இயக்கப்படும்’ என கூறப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்தி: “இந்தியா எப்போதும் உதவ தயாராக இருக்கிறது”- பிரதமரை சந்தித்தபின் இலங்கை தூதரகம்

Source: https://www.puthiyathalaimurai.com/newsview/132466/Chennai-metro-train-services-to-start-30-minutes-early