ஐஐடி மெட்ராஸ் உடன் கைகோர்த்த டிசிஎஸ்.. ஐடி ஊழியர்களுக்கு டக்கரான வாய்ப்பு..!! – Goodreturns Tamil

சென்னைச் செய்திகள்
For Quick Alerts
Subscribe Now
 

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
 

For Daily Alerts

இந்திய ஐடி துறை வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் நிலையில் தொடர்ந்து புது புது தொழில்நுட்பம் சார்ந்த ப்ராஜெக்ட்கள் கிடைத்து வருகிறது. இதற்கு ஏற்றார் போல் அனைத்து துறையிலும் தற்போது டெக் மற்றும் டிஜிட்டல் சேவைகளைக் கொண்டு வர வேண்டியது கட்டாயமாகியுள்ளது. இதனால் இந்திய ஐடி சேவை துறைக்கான வளர்ச்சி வாய்ப்புகள் மிகப்பெரிய அளவில் விரிவடைந்துள்ளது.

ரஷ்யா உடன் வர்த்தகம் செய்ய 3 புதிய ஏற்றுமதி வழிகள்.. உலக நாடுகளின் தடை வீணா..?!

ஆனால் மறுபுறம் புதிய தொழில்நுட்பத்தில் போதுமான மற்றும் திறன் வாய்ந்த ஊழியர்கள் இல்லை என்பது தான் தற்போதைய நிலையில், இந்த இடைவெளியை சமாளிக்க இந்தியாவின் முன்னணி ஐடி சேவை மற்றும் மென்பொருள் ஏற்றுமதி நிறுவனமான டிசிஎஸ், இந்தியாவின் முன்னணி தொழில்நுட்ப கல்லூரியான ஐஐடி மெட்ராஸ் (சென்னை) உடன் கைகோர்த்துள்ளது.

டாடா கன்சல்டன்சி சர்வீசஸ்

டாடா கன்சல்டன்சி சர்வீசஸ்

டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS) நிறுவனம் வளர்ந்து வரும் முக்கியமான தொழில்நுட்ப பிரிவில் திறன் வாய்ந்த ஊழியர்களை உருவாக்க வேண்டும் என்பதற்காக ஐஐடி மெட்ராஸ் கல்லூரி உடன் இணைந்து பணிபுரியும் ஊழியர்களுக்குப் பிரத்தியேகமாகத் திட்டமிட்டு இண்டஸ்ட்ரியல் ஆர்டிபிஷயல் இண்டலிஜென்ஸ் பிரிவில் புதிய எம்டெக் பட்ட படிப்பை அறிமுகம் செய்துள்ளது.

ஐஐடி மெட்ராஸ்

ஐஐடி மெட்ராஸ்

சுமார் 18 மாதங்கள் கொண்ட இந்த எம்டெக் பட்டப்படிப்பை டிசிஎஸ் உடன் ஆலோசனை செய்து ஐஐடி மெட்ராஸ் கல்லூரி நிர்வாகம் உருவாக்கியுள்ளது. இது முக்கியமாகக் கார்பரேட் ஊழியர்கள் தங்களின் திறனை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்டு உள்ளது.

செயற்கை நுண்ணறிவு

செயற்கை நுண்ணறிவு

இந்தப் பட்ட பிடிப்பு மூலம் தொழிற்சாலையில் உருவாகும் பிரச்சனைகளைச் செயற்கை நுண்ணறிவு உதவி உடன் சரி செய்யும் திறனை இந்தப் பட்டப்படிப்பு மூலம் பெற முடியும். இது இந்திய ஐடி மற்றும் டெக் ஊழியர்களுக்குப் பெரிய அளவில் உதவுவது மட்டும் அல்லாமல் செயற்கை நுண்ணறிவு மற்றும் மெஷின் லேர்னிங் பிரிவில் மிகப்பெரிய வாய்ப்பை பெற உதவும்.

எம்டெக் பட்ட படிப்பு

எம்டெக் பட்ட படிப்பு

இந்த எம்டெக் இண்டஸ்ட்ரியல் ஆர்டிபிஷயல் இண்டலிஜென்ஸ் பட்ட படிப்பில் ஒவ்வொரு பாடத்திற்கும் ஒரு இடைக்கால மற்றும் இறுதித் தேர்வு ஆன்லைன் முறையில் நடத்தப்படும், இதனுடன் ப்ராஜெக்ட்-ம் அடங்கும்.ஒரு வாரத்திற்கு மொத்தம் 28-30 மணிநேர ஆன்லைன் வகுப்புகள் இருக்கும்.

வெற்றி

வெற்றி

ஆன்லைன் வகுப்புகளைத் தாண்டி அசைன்மென்ட், ரீடிங், மற்றும் பயிற்சிகள் போன்றவை வாரத்திற்கு 20-22 மணிநேரம் இருக்கும். இத்தகைய படிப்புகள் வரும் தலைமுறைக்குப் பெரிய அளவில் உதவும். ஐஐடி மெட்ராஸ்-ன் இத்திட்டம் வெற்றிபெறும் பட்சத்தில் அடுத்த சில வருடத்தில் இத்தகைய பட்டப்படிப்பு பிடெக் பிரிவில் கூட வரலாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
Get Latest News alerts.
Allow Notifications
You have already subscribed
English summary

TCS- IIT Madras jointly introduced MTech in Industrial Artificial Intelligence course

TCS- IIT Madras jointly introduced MTech in Industrial Artificial Intelligence course ஐஐடி மெட்ராஸ் உடன் கைகோர்த்த டிசிஎஸ்.. ஐடி ஊழியர்களுக்கு டக்கரான வாய்ப்பு..!!

Source: https://tamil.goodreturns.in/news/tcs-iit-madras-jointly-introduced-mtech-in-industrial-artificial-intelligence-course-027349.html