சென்னை சென்ட்ரலில்.. மத்திய சதுக்கம்.. திறந்து வைத்த முதல்வர்.. நெகிழ்ந்து பேசிய நர்ஸ்கள்! – Oneindia Tamil

சென்னைச் செய்திகள்

சென்னை சென்ட்ரல் பகுதியில் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் நிதியுதவியுடன் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தால் செயல்படுத்தப்படும் உலகத் தரம் வாய்ந்த பன்முக போக்குவரத்து ஒருங்கிணைப்பு திட்டமான மத்திய சதுக்கத் திட்டத்தின் கீழ் ரூ 34.22 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அழகுப்படுத்தப்பட்ட நில மேம்பாட்டு வசதிகள் மற்றும் சுரங்க நடைபாதையை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.

மொத்தம் 5.. பிரதமர் மோடியின் டெய்லி வேலையே இதுதான்.. லிஸ்ட் போட்டு விமர்சித்த ராகுல் காந்தி!மொத்தம் 5.. பிரதமர் மோடியின் டெய்லி வேலையே இதுதான்.. லிஸ்ட் போட்டு விமர்சித்த ராகுல் காந்தி!

அழகுப்படுத்தப்பட்ட நில மேம்பாட்டு வசதிகள் நிறைந்த வெளிப்பகுதி, நடந்து செல்பவர்களுக்கு பாதுகாப்பாகவும் வசதியாகவும் மேம்படுத்தப்பட்டு மரங்கள், புல்வெளி மற்றும் அழகிய தாவரங்களுடன் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

வண்ண விளக்குகள்

மேலும் வண்ண விளக்குகளுடன் கூடிய நீரூற்றுகள் நடைபாதையில் டென்சைல் கானோபி, பர்கோலாஸ், கிரானைட் இருக்கைகள், நடைபாதையை ஒட்டி வண்ண விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. வாகனங்கள் எளிதில் செல்லும் வகையில் பாதைகளும், கிரானைட் கற்கள் பதிக்கப்பட்ட நடைபாதைகளும் அமைக்கப்பட்டுள்ளன.

ரூ 12.49 கோடி

இந்த மேம்பாட்டு பணிகள் ரூ 12.49 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டன. அது போல் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் முன்பகுதியில் பல்லவன் சாலை பூந்தமல்லி நெடுஞ்சாலை சந்திப்பிற்கு குறுக்கே பாதசாரிகள் பாதுகாப்பாக செல்லும் வகையில் சுரங்க நடைபாதை அமைக்கப்பட்டு பொதுமக்கள் எளிதாகப் பயன்படுத்தும் வகையில் அனைத்து வகையான பயனாளிகளும் பயன்பெறுமாறு மின்தூக்கிகள், நகரும் படிக்கட்டுகளும் அமைக்கப்பட்டுள்ளன.

பூந்தமல்லி நெடுஞ்சாலை

ஏற்கெனவே பூந்தமல்லி நெடுஞ்சாலையின் குறுக்கே அமைந்துள்ள சுரங்க நடைபாதையுடன் இவை ஒருங்கிணைக்கப்பட்டு பழைய சுரங்கப் பாதையும் மேம்படுத்தப்பட்டுள்ளது. மேலும் தேவையான மின்விளக்குகள் மற்றும் ஒளிரும் வழிகாட்டிகளும் அமைக்கப்பட்டுள்ளன. இந்த சுரங்க நடைபாதை ரூ 21 கோடியில் அமைக்கப்பட்டுள்ளது.

முதல்வர் ஸ்டாலின்

இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறுகையில் சென்னை சென்ட்ரல் பகுதியில் அமைக்கப்பட்டு வரும் போக்குவரத்து ஒருங்கிணைப்புத் திட்டத்தின் ஒரு பகுதியாக அழகுபடுத்தப்பட்ட நில மேம்பாட்டு வசதிகள் மற்றும் சுரங்க நடைபாதையைப் பொதுமக்கள் பயன்பாட்டுக்குத் திறந்து வைத்தேன். எழில்மிகு சென்னையில் காணும் இடமெல்லாம் கண்கவர் இடங்களாக்குவோம்! என குறிப்பிட்டு அந்த திறப்பு விழா வீடியோவை வெளியிட்டுள்ளார்.

எஸ்கலேட்டர்

இந்த பகுதிகளை பார்வையிட்டு, எஸ்கலேட்டரில் ஏறி ஆய்வு செய்த நிலையில் அவர் அங்கு திரண்டிருந்த செவிலியர்களிடம் பேசினார். அவர்களது குறைகளை கேட்டறிந்தார். அப்போது அவர்கள், செவிலியர்களை ஊக்குவிக்கும் விதமாக எங்களுக்கு ஊக்கத் தொகை கொடுத்ததற்கு மிகவும் நன்றி. நாங்கள் கேட்காமலேயே நிறைய செய்கிறீர்கள். நாங்கள் கேட்டால் இன்னும் நிறைய செய்வீர்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது என்றனர். அப்போது முதல்வர் ஸ்டாலின் அவர்களிடம், உங்களுடைய உழைப்புக்கும் தியாகத்திற்கும் என்னுடைய நன்றி என்றார். இதனால் செவிலியர்கள் நெகிழ்ந்தனர்.

English summary
CM Stalin spoke with nurses who gathered in Chennai Central as he inaugurated Central Sqaure.

Source: https://tamil.oneindia.com/news/chennai/cm-stalin-spoke-with-nurses-who-gathered-in-chennai-central-453428.html