ஐ.ஐ.டி மாணவி பாலியல் வழக்கு… ஜாமீனில் வெளிவந்த முக்கிய குற்றவாளிக்கு சென்னை போலீஸ் சம்மன்! – Indian Express Tamil

சென்னைச் செய்திகள்

2020 ஆம் ஆண்டில், பாலியல் துன்புறுத்தலுக்கு எதிரான புகார்கள் குழு’ குற்றச்சாட்டுகள் உண்மை என்று கண்டறிந்தது.

சென்னை ஐஐடி-மெட்ராஸ் மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் முக்கிய குற்றவாளியான 30 வயதான கிங்ஷுக் தேப்சர்மாவை, ஏப்ரல் 15 ஆம் தேதிக்குள் ஆஜராகுமாறு சென்னை காவல்துறை சம்மன் அனுப்பியுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை இரவு கைது செய்யப்பட்ட தேப்சர்மாவுக்கு, மேற்கு வங்கத்தில் உள்ள மாஜிஸ்திரேட் நீதிமன்றம் திங்கள்கிழமை ஜாமீன் வழங்கிய ஒரு நாள் கழித்து இது வந்துள்ளது.

குற்றம் சாட்டப்பட்டவர்கள் தங்கள் முன் ஆஜராகவில்லை என்றால், அது குறித்து ஆலோசித்து அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர்.

2021 டிசம்பரில், பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி, உயிர் பிழைத்த அந்த மாணவி, புதிய புகார் அளித்ததை அடுத்து, தேப்சர்மா முன்ஜாமீன் பெற்றார். முன்ஜாமீன் விதிகளை மீறியதால், அவர் கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

மற்ற ஏழு குற்றவாளிகளும் தொற்றுநோய்களின் போது’ ஐஐடி விட்டு வெளியேறி சென்னையை விட்டு வெளியேறினர் என்று போலீசார் தெரிவித்தனர். 2016 ஆம் ஆண்டு ஐஐடி-எம்மில் சேர்ந்ததில் இருந்து, தான் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் துன்புறுத்தப்பட்டதாக பாதிக்கப்பட்ட பெண் தனது புகாரில் கூறியுள்ளார்.

மற்ற குற்றம் சாட்டப்பட்டவர்கள் தேப்சர்மாவுக்கு உடந்தையாக இருந்ததாகக் கூறப்படுகிறது. 2020 ஆம் ஆண்டில், பாலியல் துன்புறுத்தலுக்கு எதிரான புகார்கள் குழு குற்றச்சாட்டுகள் உண்மை என்று கண்டறிந்தது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Source: https://tamil.indianexpress.com/tamilnadu/iit-madras-scholar-rape-case-the-chennai-police-summoned-the-main-accused-432745/