ப்பா சூப்பர் லுக்.. வெளிநாடுகளுக்கு இணையான வசதி.. சென்னை மத்திய சதுக்கத்தின் சிறப்புகள் என்னென்ன! – Oneindia Tamil

சென்னைச் செய்திகள்

சென்னை: சென்னை சென்ட்ரால் ரயில் நிலையம் அருகே சென்னை மத்திய சதுக்கம் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் 500 கார்கள், 1500 பைக்குகள் நிறுத்த வசதி செய்யப்பட்டுள்ளது உள்பட பல்வேறு சிறப்பம்சங்கள் உள்ளன.

சென்னையின் அடையாளாக சென்ட்ரல் ரயில் நிலையம் உள்ளது. இந்த ரயில் நிலையம் அருகே ரூ.400 கோடி மதிப்பீட்டில் நகரை அழகாக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த ரயில் நிலையத்தின் அருகே சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் நிதியுதவியுடன் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் சார்பில் உலக தரம் வாய்ந்த பன்முக போக்குவரத்து ஒருங்கிணைப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

Exclusive: ஒசூர் -பெங்களூர் இடையே மெட்ரோ ரயில்! கர்நாடக முதல்வர் தமிழக எம்.பி.யிடம் என்ன சொன்னார்?Exclusive: ஒசூர் -பெங்களூர் இடையே மெட்ரோ ரயில்! கர்நாடக முதல்வர் தமிழக எம்.பி.யிடம் என்ன சொன்னார்?

ஸ்டாலின் திறந்து வைப்பு

இதில் ஒன்று தான் சென்னை மத்திய சதுக்க திட்டம். இந்த திட்டத்தின் கீழ் ரூ.34.22 கோடியில் நில மேம்பாட்டு வசதிகள், சுரங்க நடைபாதை பணிகள் நடைபெற்று வந்தன.பணிகள் முடிவடைந்த நிலையில் கண்ணை கவரும் வகையில் அமைக்கப்பட்டுள்ள இந்த சதுக்கத்தை முதல்வர் ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.

அழகு செடிகள், நீரூற்றுகள்

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு தினமும் பல்லாயிரக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர். இதனால் மக்கள் நடமாட்டம் எப்போதும் அதிகமாகவே இந்த பகுதியில் காணப்படும். இந்நிலையில் தான்மத்திய சதுக்கம் நவீன முறையில் திறக்கப்பட்டுள்ளது. இந்த சதுக்கத்தில் அழகிய செடிகள், வண்ண விளக்குகளுடன் கூடிய நீரூற்றுகள் உள்ளன. இவை கண்களை கவரும் வகையில் உள்ளது. இதன்மூலம் சென்ட்ரல் ரயில் நிலையத்தின் அழகு அதிகரிப்பதோடு, பார்ப்போரை கவர்ந்து இழுக்கிறது. நவீன கட்டமைப்புகளுடனும், அழகிய பூங்காங்களுடனும் மத்திய சதுக்கம் உருவாக்கப்பட்டுள்ளது.

பார்க்கிங் வசதிகள்

இந்த சதுக்கத்தில் 500 கார்கள், 1500 பைக்குகளை நிறுத்தும் அளவுக்கு இடவசதி செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் பாதுகாப்பாக சென்று வர வசதியாக ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு செல்ல சுரங்கபாதை வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும் நடைபாதையில் டென்சைல் கானோபி, பர்கோலாஸ், கிரானைட் இருக்கைகள், நடைபாதையை ஒட்டி வண்ண விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. வாகனங்கள் எளிதில் செல்லும் வகையில் பாதைகளும், கிரானைட் கற்கள் பதிக்கப்பட்ட நடைபாதைகளும் அமைக்கப்பட்டுள்ளன.

சுரங்க நடைபாதை

பல்லவன் சாலை பூந்தமல்லி நெடுஞ்சாலை சந்திப்பிற்கு குறுக்கே பாதசாரிகள் பாதுகாப்பாக செல்லும் வகையில் சுரங்க நடைபாதை அமைக்கப்பட்டு பொதுமக்கள் எளிதாகப் பயன்படுத்தும் வகையில் அனைத்து வகையான பயனாளிகளும் பயன்பெறுமாறு மின்தூக்கிகள், நகரும் படிக்கட்டுகளும் அமைக்கப்பட்டுள்ளன. ஏற்கெனவே பூந்தமல்லி நெடுஞ்சாலையின் குறுக்கே அமைந்துள்ள சுரங்க நடைபாதையுடன் இவை ஒருங்கிணைக்கப்பட்டு பழைய சுரங்கப் பாதையும் மேம்படுத்தப்பட்டுள்ளது.

English summary
In Chennai: Parking facility for 500 car, 1500 bike! What are the highlights of Chennai Central Square.

Source: https://tamil.oneindia.com/news/chennai/parking-facility-for-500-car-1500-bike-what-are-the-highlights-of-chennai-central-square-453478.html