ரூட் கிளியர்.. பச்சை, மஞ்சள், சிவப்பு.. சென்னை மக்களுக்கு ஹேப்பி நியூஸ்.. என்னன்னு பாருங்க..! – Oneindia Tamil

சென்னைச் செய்திகள்

சென்னை: சென்னை என்றாலே டிராபிக் என்ற சொல் இனி மாற போகிறது.. ரிமோட் சிக்னல்களை வைத்து புது முயற்சியை போக்குவரத்து துறையினர் கையில் எடுத்துள்ளது, சென்னைவாசிகளை வியக்க வைத்து வருகிறது.

தமிழகத்தின் தலைநகர் என்பதால், சென்னையை யாராலும் தவிர்க்க முடிவதில்லை.. சென்னையில் பல பிரதான இடங்கள் எந்த அளவுக்கு புகழ்பெற்றதோ, அதே அளவுக்கு பேசுபொருளாகிவிடுவது சென்னையின் போக்குவரத்து நெரிசலும்தான்..!

பள்ளி கல்லூரி நேரங்களிலும் டிராபிக்.. வாகனங்களின் அதிக எண்ணிக்கையால் டிராபிக்.. விழா என்றாலும் டிராபிக்.. ஊர்வலம் என்றாலும் டிராபிக்.. போராட்டம் என்றாலும் டிராபிக்.. வெயில் மழை என்றாலும் டிராபிக்.. என நெரிசலை அடையாளப்படுத்தி கொண்டே இருக்கிறது சென்னை..!

காஷ்மீருக்கே 3280 ரூபாய்தான்.. சென்னை டூ நெல்லைக்கு சுங்க கட்டணம் 900.. வண்டி ஓட்டுறதா வேண்டாமா?காஷ்மீருக்கே 3280 ரூபாய்தான்.. சென்னை டூ நெல்லைக்கு சுங்க கட்டணம் 900.. வண்டி ஓட்டுறதா வேண்டாமா?

ரயில், மெட்ரோ

இதனால் சென்னைவாசிகள் மட்டுமல்ல, வெளியூரில் இருந்து யார் சென்னைக்கு வந்தாலும், அவர்கள் அஞ்சி நடுங்குவதே இந்த டிராபிக்கை பார்த்துதான்.. இதற்கு பயந்துகொண்டே மக்கள், ரயில், மெட்ரோ என தாவிவிடுகிறார்கள்.. அதேசமயம், குறிப்பிட்ட நேரத்துக்கு குறிப்பிட்ட இடங்களுக்கு மக்களால் செல்ல முடியாத நெருக்கடியும் ஏற்பட்டுவிடுகிறது.. எவ்வளவுதான் டிராபிக்குகளை போலீசார் கிளியர் செய்தாலும், அவர்களாலும் கட்டுக்கடங்காத வாகனங்களை சமாளிக்க முடிவதில்லை..

கூண்டுகள்

விதிமீறல்களையும் கவனிக்க வேண்டி உள்ளது.. கூண்டுக்குள்ளேயே நிற்பதால், விபத்து ஏற்படாமல் இருப்பதை முழுவதுமாக தடுக்கவும் முடியவில்லை. அதனால்தான், இதற்கெல்லாம் ஒரு தீர்வு தற்போது எடுக்கப்பட்டுள்ளது.. இதனால் விபத்துகளை குறைக்கவும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கவும் ரிமோட் முறையில் இயங்கும் சிக்னல்கள் அமைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது… இதன் முதற்கட்டமாக 5 இடங்களில் சோதனை ஓட்டமும் தொடங்கப்பட்டுள்ளது..

சிக்னல்கள்

இதனை சென்னை காவல் ஆணையர் உத்தரவின் பேரில் போக்குவரத்து கூடுதல் ஆணையர் தலைமையிலான போலீசார், ரிமோட் மூலம் இயங்கும் போக்குவரத்து சிக்னல்களை அமைக்க முடிவு செய்தனர்… முதல்கட்டமாக வேப்பேரி காவல் ஆணையர் அலுவலகம் அருகேயுள்ள ஈவிகே.சம்பத் சாலை, எழும்பூர் காந்தி இர்வீன் சாலை, வேப்பேரி ரித்தர்டன் சாலை, எழும்பூர் நாயர் பாலம் பகுதி, புரசைவாக்கம் தாசப்பிரகாஷ் ஆகிய 5 இடங்களில் ரிமோட் மூலம் இயங்கும் போக்குவரத்து சிக்னல்கள் அமைக்கப்பட்டு, சோதனை ஓட்டம் தொடங்கியுள்ளது.

சென்னை

விரைவில் சென்னையில் முழுவதும் ரிமோட் மூலம் இயங்கும் சிக்னல்கள் படிப்படியாக அமைக்கப்பட உள்ளதாகவும் நம்பிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது. ரிமோட் மூலம் போக்குவரத்து சிக்னல்களை இயக்குவதால், சாலை சந்திப்புகளில் நேரடியாக நின்றுகொண்டு, வாகனங்களின் எண்ணிக்கை, நெரிசலுக்கு தகுந்தவாறு ரிமோட் மூலம் பச்சை, மஞ்சள், சிவப்பு சிக்னல்களை உடனுக்குடன் மாற்றி அமைக்க முடியும். ஆம்புலன்ஸ் வாகனம் வந்தால்கூட நெரிசலின்றி கடந்து செல்ல உதவ முடியும். மேலும், பாதசாரிகள் சாலையைக் கடக்கவும் உதவ முடியும் என்று போக்குவரத்துதுறை போலீசார் கூறினர்.

English summary
super introducing Remote traffic signal facility in Chennai five places

Source: https://tamil.oneindia.com/news/chennai/super-introducing-remote-traffic-signal-facility-in-chennai-five-places-453720.html