சென்னை: விதியை மீறிய 1,200 கட்டடங்களுக்குச் சீல்… மாநகராட்சி அதிரடி! – Vikatan

சென்னைச் செய்திகள்

மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு மேற்கொள்ளும்போது திட்ட அனுமதியைத் தாண்டி, விதி மீறலில் ஈடுபட்டுள்ள கட்டடங்களின் கட்டுமான பணியை நிறுத்த சொல்லி நோட்டீஸ் வழங்கியும், கட்டடங்களுக்குச் சீல் வைத்தும் நடவடிக்கை எடுத்துவருகிறார்கள். சமீபத்தில் சென்னை மாநகராட்சியில் உள்ள 7,000-க்கும் அதிகமான கட்டடங்களில் ஆய்வு நடத்தினர். அதில், 6,500-க்கும் மேற்பட்ட கட்டடங்களில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மாநகராட்சி நோட்டீஸ்

இந்த ஆய்வில் விதி மீறிக் கட்டப்பட்டுள்ள 1,400-க்கும் அதிகமான கட்டடங்களின் கட்டுமான பணியை நிறுத்த சொல்லி மாநகராட்சி சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. அதேபோல, விதி மீறிய 1,200 கட்டடங்களுக்குச் சீல் வைக்க நோட்டீஸ் வழங்கப்பட்டிருக்கிறது. இதுவரை 160-க்கும் மேற்பட்ட கட்டங்களுக்குச் சீல் வைத்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், புதிய கட்டடங்கள் கட்டுபவர்கள் விதி மீறலில் ஈடுபட்டால் உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநகராட்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Source: https://www.vikatan.com/news/tamilnadu/chennai-corporation-has-issued-notices-to-seal-1200-illegal-buildings