சென்னை வாசிகளுக்கு செம ஹேப்பி நியூஸ்! – Tamil Samayam

சென்னைச் செய்திகள்

சென்னை மாநகராட்சி மேயர் பதவி முதன்முறையாக பட்டியலினப் பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு கடும் போட்டி நிலவி வந்த நிலையில், புதிய மேயராக சென்னை திருவிக நகர் 74-வது வார்டு கவுன்சிலர் பிரியா ராஜன்(28) கடந்த மாதம் 4-ம் தேதி பதவியேற்றார்.

இளம் வயது மேயர் என்பதால் திமுக சார்பில் பதவி, பணிகள், செயல்பாடுகள் குறித்து பிரியா ராஜனுக்கு பயிற்சி வழங்கப்பட்டது. ஆரம்பம் முதலே பொது மேடைகளில் தன்னடக்கத்துடன் நடந்து வரும் மேயர் பிரியா நலத்திட்ட பணிகளில் எவ்வித சமரசரமுமின்றி செயல்பட்டு வருகிறார்.

மகளிர் தின விழா, கொரோனா தடுப்பூசி முகாம்கள், குழந்தைகளுக்கான குடற்புழு நீக்க மாத்திரை வழங்குதல், மாநகராட்சி ஒப்பந்ததாரர்களுடன் ஆலோசனை, அதிகார துஷ்பிரயோகம் செய்யும் கவுன்சிலர்களுக்கு எச்சரிக்கை என தனது செயல்பாடுகள் மூலம் பலருக்கு பதிலளித்து வருகிறார்.

உதய் அண்ணாவுக்கு நன்றி – மேயர் பிரியா ராஜன்!

இந்தநிலையில், 2022 – 2023 நிதியாண்டுக்கான சென்னை மாநகராட்சி பட்ஜெட் எப்போது தாக்கல் செய்யப்படும். அதில் இடம்பெறக் கூடிய அறிவிப்புகள் குறித்து மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. அதற்கு முக்கிய விடையாக வரும் 9-ம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. அன்றைய தினமே பட்ஜெட் மீதான விவாதமும் நடைபெறவுள்ளது.

கடந்த 6 ஆண்டுகளாக மாநகராட்சி மேயர் பதவி காலியாக இருந்ததால் தனி அலுவலர் பட்ஜெட் தாக்கல் செய்த நிலையில், சென்னை மாநகராட்சியின் புதிய மேயர் பிரியா ராஜன் தனது முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்யவிருக்கிறார்.
சீறும் சென்னை மேயர் பிரியா… அதிர்ச்சியில் உறைந்த அதிகாரிகள்!

மேயர் பொறுப்பேற்ற பிறகு செய்தியாளர்களை சந்தித்த பிரியா ராஜன், வட சென்னை மக்களின் வளர்ச்சி, சென்னை மழைநீர் வடிகால், சாலை வசதி, மழைநீர் சேமிப்பு ஆகிய திட்டங்களுக்கு முக்கியத்துவம் அளிப்பேன் என்று கூறியிருந்தார். இதனால் அதற்கான முக்கிய திட்டங்கள் வகுக்கப்பட்டு நிதி ஒதுக்கீடு செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. சென்னை மாநகராட்சிக்கு 2021 – 2022 நிதியாண்டில் 2,438 கோடி ரூபாக்கு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Source: https://tamil.samayam.com/latest-news/chennai-news/chennai-corporation-mayor-priya-rajan-will-submit-budget-coming-9th/articleshow/90656395.cms