சென்னை: தலை முடியை பிடித்து கொண்டு நடுரோட்டில் சண்டையிட்ட கல்லூரி மாணவிகள் – தினத் தந்தி

சென்னைச் செய்திகள்

சென்னையில் நடுரோட்டில் கல்லூரி மாணவிகள் சண்டையிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

சென்னை,

சென்னை அண்ணா நகரில் நேற்று தனியார் கல்லூரி மாணவிகள் இருவர் நடு ரோட்டில் தலைமுடியை பிடித்துக்கொண்டு ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சண்டையிட்ட மாணவிகளை சக மாணவிகள் தடுத்து நிறுத்த முயற்சித்தனர். ஆனால், அந்த மாணவிகள் தொடர்ந்து சண்டையிட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

மாணவிகள் ஒருவரை ஒருவர் தலைமுடியை பிடித்துக்கொண்டு சண்டையிடும் காட்சியை சிலர் வீடியோவாக எடுத்து சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளனர்.

அந்த வீடியோ தற்போது சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது. 

Source: https://www.dailythanthi.com/News/TopNews/2022/04/06072705/College-Girls-Fight-at-busy-Road-in-Chennai-Anna-Nagar.vpf