வாவ்.. சென்னை-யில் அலுவலகத்தை திறக்கும் ZOOM.. வேற லெவல் திட்டம்..! – Goodreturns Tamil

சென்னைச் செய்திகள்
For Quick Alerts
Subscribe Now
 

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
 

For Daily Alerts

லாக்டவுன் அறிவிக்கப்பட்டதில் இருந்து அனைத்துத் தரப்பு மக்களும் பயன்படுத்தும் மிக முக்கியமான செயலிகளில் ஒன்றாக மாறிய ஜூம் செயலி நிறுவனம், ஏற்கனவே பெங்களூரில் அலுவலகத்தை வைத்திருக்கும் நிலையில் தற்போது சென்னையில் புதிய அலுவலகத்தைத் திறப்பதாக அறிவித்துள்ளது.

சமீப காலமாகப் பல முன்னணி ஐடி நிறுவனங்கள் தங்களது அலுவலகத்தைத் தமிழ்நாட்டில் திறந்து வருகிறது. குறிப்பாக அமேசான் தனது இந்தியாவிலேயே 2வது பெரிய அலுவலகத்தை முதல் ஸ்டாலின் திறந்து வைத்தார். இதைத் தொடர்ந்து தற்போது ஜூம் கலக்கலான அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.

ஜூம் செயலி

ஜூம் செயலியின் உரிமையாளரான ஜூம் வீடியோ கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் இந்தியாவில் தனது தொழில்நுட்ப கட்டமைப்பு அணியை விரிவாக்கம் செய்ய முடிவு செய்துள்ளது. இதற்காக ஏற்கனவே பெங்களூரில் இருக்கும் டெக் சென்டரை தொடர்ந்து சென்னையில் புதிய டெக் சென்டரை துவங்க முடிவு செய்யப்பட்டு உள்ளது என அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

சென்னை அலுவலகம்

சென்னை அலுவலகம்

சென்னை அலுவலகத்தை ஜூம் வீடியோ கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தின் குளோபல் இன்ஜினியரிங்க பிரிவு நிர்வாகம் செய்ய உள்ளது. மேலும் மும்பை மற்றும் ஹைதராபாத்-ல் இருக்கும் இரு டேட்டா சென்டர்கள் உடன் தற்போது சென்னையில் புதிய டெக்னாலஜி சென்டரை உருவாக அமைக்க உள்ளதால் விரைவில் புதிய ஊழியர்களைத் தேர்வு செய்யும் பணிகளைத் துவங்க உள்ளதாக ஜூம் நிறுவனத்தின் ப்ராடெக்ட் மற்றும் இன்ஜினியரிங் பிரிவின் தலைவர் வேல்ச்சாமி சங்கர்லிங்கம் தெரிவித்துள்ளார்.

வேல்ச்சாமி சங்கர்லிங்கம்

வேல்ச்சாமி சங்கர்லிங்கம்

சென்னை அலுவலகம் ஜூம் நிறுவனத்தின் இன்னோவேஷன் பிரிவில் முக்கியப் பங்கு வகிக்கும். ஜூம் கான்டெக்ட் சென்டர் உட்படப் பல முக்கியச் சேவைகளின் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி தளமாகப் புதிய சென்னை டெக்னாலஜி சென்டர் இருக்கும் என வேல்ச்சாமி சங்கர்லிங்கம் தெரிவித்துள்ளார்.

Five9 தோல்வி

Five9 தோல்வி

சமீபத்தில் ஜூம் நிறுவனம் Five9 என்னும் கிளவுட் கான்டெக்ட் சென்டர் சேவை நிறுவனத்தை 14.9 பில்லியன் டாலருக்கு கைப்பற்ற திட்டமிட்டது. ஆனால் அதீத மதிப்பீடு காரணமாக இந்தக் கைப்பற்றும் திட்டம் தோல்வி அடைந்தது.

கான்டெக்ட் சென்டர் சேவை

கான்டெக்ட் சென்டர் சேவை

ஆனாலும் ஜூம் தனது கான்டெக்ட் சென்டர் சேவையை அறிமுகம் செய்தது, தற்போது சென்னை அலுவலகம் இத்திட்டத்தை விரிவாக்கம் மற்றும் மேம்படுத்தும் பணிகளைச் செய்ய உள்ளது. மேலும் சென்னை அலுவலகம் ஜூம் நிறுவனத்தின் R&D பிரிவின் முக்கியப் பங்கு வகிக்க உள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
Get Latest News alerts.
Allow Notifications
You have already subscribed
English summary

US based Zoom setting up new tech centre in Chennai

US based Zoom setting up new tech centre in Chennai வாவ்.. சென்னையில் அலுவலகத்தைத் திறக்கும் ZOOM.. வேற லெவல் திட்டம்..!

Story first published: Wednesday, April 6, 2022, 7:58 [IST]

Source: https://tamil.goodreturns.in/news/us-based-zoom-setting-up-new-tech-centre-in-chennai-027576.html