சென்னை ஸ்மார்ட் சிட்டி திட்டம்: வழிகாட்டு குழு தலைவர், உறுப்பினர்கள் நியமனம் – தினத் தந்தி

சென்னைச் செய்திகள்

சென்னை, ஸ்மார்ட் சிட்டி திட்டத்துக்கான வழிகாட்டு குழு தலைவராக மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

சென்னை,

தமிழகத்தில் சென்னை, மதுரை உள்ளிட்ட நகரங்களில் ஸ்மார்ட் சிட்டி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில்,சென்னையில் ஸ்மார்ட்சிட்டி திட்டத்தை  செயல்படுத்துவது தொடர்பாக  அமைக்கப்பட்ட ஆலோசனைக் குழு மறுசீரமைப்பு செய்யப்பட்டுள்ளது. 

அதன்படி சென்னை ஸ்மார்ட் சிட்டி திட்டத்துக்கான வழிகாட்டு குழு தலைவராக சென்னை மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி நியமிக்கப்பட்டுள்ளார்.  துணைத்தலைவராக வட சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி நியமனம் செய்யப்பட்டுள்ளார். 

மேலும் உறுப்பினர்களாக சட்டமன்ற உறுப்பினர் எழிலன் , சென்னை மாநகராட்சி மேயர் பிரியா , துணை ஆணையர் பிரசாந்த் உள்பட 7 பேர் உறுப்பினர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

சென்னையில் ஸ்மார்ட்சிட்டி திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பான ஆலோசனைகள் மற்றும்  பரிந்துரைகளை இக்குழு வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source: https://www.dailythanthi.com/News/TopNews/2022/04/07165327/Chennai-Smart-City-Project-Appointment-of-Steering.vpf