சிங்கார சென்னை 2.0.. காலை உணவு திட்டம் முதல்.. டிஜிட்டல் போர்ட் வரை.. மேயர் பிரியா அசத்தல் அறிவிப்பு – Oneindia Tamil

சென்னைச் செய்திகள்

சென்னை: சென்னை மாநகராட்சி பட்ஜெட் 6 ஆண்டுகளுக்கு பின் இன்று தாக்கல் செய்யப்பட்டது. இதில் பல முக்கியமான அறிவிப்புகள், திட்டங்கள் இடம்பெற்றுள்ளன.

image

சென்னை மாநகராட்சி பட்ஜெட் | Chennai Corporation Budget 2022 | Oneindia Tamil

சென்னையில் மாநகராட்சி தேர்தல் நடக்காமல் இருந்ததால் கடந்த 6 வருடமாக பட்ஜெட் தாக்கல் செய்யப்படாமல் இருந்தது. நேரடியாக பட்ஜெட் தாக்கல் செய்யப்படாமல் மறைமுகமாக பட்ஜெட் அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வந்தன.

மதுரையில் 5 கி.மீ. நடைப்போட்டி.. வெற்றிபெற்ற 66 வயது முதியவர்!மதுரையில் 5 கி.மீ. நடைப்போட்டி.. வெற்றிபெற்ற 66 வயது முதியவர்!

ஆணையர்கள், துணை ஆணையர்கள் மட்டுமே மறைமுகமாக பட்ஜெட்டை தாக்கல் செய்து வந்தனர். இந்த நிலையில் இன்று பட்ஜெட்டை வரிவிதிப்பு மற்றும் நிதிக்குழுத் தலைவா் சா்பஜெயாதாஸ் நரேந்திரன் தாக்கல் செய்தார். மேயர் பிரியாவின் ஒப்புதலை அடுத்து அவரின் முன்னிலையில் இந்த பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.

பட்ஜெட்

இன்று அறிவிக்கப்பட்ட பட்ஜெட்டில் பல முக்கியமான அறிவிப்புகள், திட்டங்கள் இடம்பெற்று இருந்தன. பட்ஜெட்டில் இடம்பெற்ற முக்கியமான திட்டங்களை மேயர் பிரியா அறிவித்தார். இதில் 2011 கணக்கின்படி, சென்னையில் 66.72 லட்சமாக இருந்த மக்கள் தொகை தற்போது 88 லட்சமாக அதிகரித்துள்ளதால் பிரியா தெரிவித்தார்.

பட்ஜெட் டாப் 10 அறிவிப்புகள்

1. சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் சென்னையில் இருக்கும் தெரு பெயர்கள், சாலை பெயர்கள் டிஜிட்டல் முறையில் மாற்றப்படும். இதற்கு 8.43 கோடி ரூபாய் செலவு செய்யப்படும் என்று மேயர் பிரியர் தெரிவித்தார்.

2. சென்னையில் வார்டு மேம்பாட்டு நிதி ரூபாய். 30 லட்சத்தில் இருந்து ரூபாய் 35 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. 200 வார்டுகளுக்கு ரூபாய் 70 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

பட்ஜெட் டாப் 10 அறிவிப்புகள்

1. சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் சென்னையில் இருக்கும் தெரு பெயர்கள், சாலை பெயர்கள் டிஜிட்டல் முறையில் மாற்றப்படும். இதற்கு 8.43 கோடி ரூபாய் செலவு செய்யப்படும் என்று மேயர் பிரியர் தெரிவித்தார்.

2. சென்னையில் வார்டு மேம்பாட்டு நிதி ரூபாய். 30 லட்சத்தில் இருந்து ரூபாய் 35 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. 200 வார்டுகளுக்கு ரூபாய் 70 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

நாப்கின்

3. சென்னை மாநகராட்சி பள்ளிகளில் 1-8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு விலையில்லா சீருடைகள் வழங்கப்படும். அதேபோல் சென்னை மாநகராட்சி பள்ளிகளில் காலை உணவு திட்டம் அமல்படுத்தப்படும். தன்னார்வலர்கள் உதவியுடன் அனைத்து சென்னை மாநகராட்சி பள்ளிகளிலும் மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்..

4. மாணவிகளுக்கு நிர்பயா நிதி உதவியின் கீழ் சானிடரி நாப்கின்கள் வாங்க நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

குப்பைகள்

5. சென்னை மாநகராட்சி குப்பைகளை சேமிக்க பேட்டரியில் இயங்கும் மேலும் 795 வாகனங்களை வாங்கப்படும். மறுசுழற்சி செய்ய முடியாத 2,600 மெட்ரிக் டன் குப்பைகளை பதப்படுத்தி, சிமென்ட் ஆலைகளுக்கு அனுப்புவது எப்படி என்பது குறித்து பயிற்சி அளிக்கப்படும். 54,000 மெட்ரிக் டன் தேங்காய் கழிவுகள் மறுசுழற்சி செய்யப்பட்டு மீண்டும் பயன்படுத்தப்படும்.

6. சென்னை மாநகராட்சி துப்புரவுப் பணியாளர்களுக்கு உடல்நலக் குறைபாட்டை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து சிகிச்சை அளிக்க சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்படும். 16,500 நெகிழி குப்பை தொட்டிகள் ரூபாய் 2.90 கோடி மதிப்பீட்டில் கொள்முதல் செய்யப்படும்.

மரங்கள்

7. சென்னை மாநகராட்சியில் புதிதாக மூன்று டயாலிசிஸ் மையங்கள் தொடங்கப்படும்; படிப்படியாக அனைத்து மண்டலங்களில் டயாலிசிஸ் மையங்கள் ஏற்படுத்தப்படும்.

8. மாற்றுத்திறனாளிகளுக்காக கடற்கரையில் நிரந்தர பாதை அமைக்கும் பணிக்கு ரூ.1.14 கோடி பெறப்பட்டுள்ளது; இந்த பணிகள் துவங்கப்பட்டு 2 மாத காலத்திற்குள் முடிக்கப்பட்டும்

9. சென்னை மாநகர் முழுவதும் 2.5 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டு பராமரிக்கப்படும். சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் இந்த திட்டம் செயல்படுத்தப்படும்.

10. சென்னை மாநகராட்சி பள்ளிகளில் பாலின சமத்துவக் குழுக்கள் ஏற்படுத்தப்படும். சென்னை மாநகராட்சி உயர்நிலை,மேல்நிலைப் பள்ளிகளில் இணைய தள இணைப்பு ஏற்படுத்த நிதி ஒதுக்கீடு செய்யப்படும், இதற்கு 1.86 கோடியில் பயன்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

English summary
சென்னை பட்ஜெட்: Top 10 announcements made by Mayor Priya Today in Chennai Budget. சென்னை மாநகராட்சி பட்ஜெட் 6 ஆண்டுகளுக்கு பின் இன்று தாக்கல் செய்யப்பட்டது. இதில் பல முக்கியமான அறிவிப்புகள், திட்டங்கள் இடம்பெற்றுள்ளன.

Source: https://tamil.oneindia.com/news/chennai/chennai-budget-top-10-announcements-made-by-mayor-priya-today-454412.html