மாநகராட்சி கசப்பான முடிவு; கலக்கத்தில் சென்னை மக்கள்! – Tamil Samayam

சென்னைச் செய்திகள்

தமிழகத்தில் சொத்து வரியை அதிரடியாக உயர்த்தி தமிழ்நாடு அரசு கடந்த மாதம் அறிவிப்பு வெளியிட்டது. அதன்படி, இந்த சொத்து வரி உயர்வை அமல்படுத்தும் நடவடிக்கையில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் மும்முரம் காட்டி வருகின்றன.

அதே சமயம் சொத்து வரி உயர்வு தொடர்பான அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு இதுதொடர்பாக பொதுமக்களிடம் கருத்து கேட்கும் பணிகளையும் தொடங்கி இருக்கிறது.

இந்நிலையில் சென்னை மாநகராட்சி சொத்து வரி உயர்வு தொடர்பான அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது. இந்த அறிவிப்பில் இனி ஆண்டுதோறும் சொத்து வரி உயர்த்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மதுரையை ஆளும் மீனாட்சிக்கு பட்டாபிஷேகம்; பக்தர்கள் பரவசம்!

இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்டு இருக்கும் அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

சதுரகிரி கோயில் முக்கிய அறிவிப்பு; மலையேறும் பக்தர்கள் கவனிக்கவும்!

ஒவ்வொரு ஆண்டும் தற்போதுள்ள அடிப்படை தெருக்கட்டணம் 6 % அல்லது 5 ஆண்டு மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தியின் சராசரி வளர்ச்சி வீதம், இவற்றில் எது அதிகமாக உள்ளதோ அதன் அடிப்படையில் உயர்த்தப்படும்.

இவ்வாறு உயர்வு செய்யப்படும். அனைத்தும் தற்போது மற்றும் புதிய மதிப்பீடுகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 1ம் தேதி முதல் நடைமுறைப்படுத்தப்படும். இந்த அறிவிப்பு தொடர்பாக பொதுமக்களுக்கு ஏதேனும் ஆட்சேபனை இருந்தால் 30 நாட்களுக்குள் ஆணையர், பெருநகர சென்னை மாநகராட்சி, ரிப்பன் மாளிகை, சென்னை 600003 என்ற முகவரிக்கு அனுப்பலாம். இவ்வாறு சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

தலைமைச்செயலகத்தில் விஜய்; ரசிகர்கள் செம ஹேப்பி!

தற்போது தெருக்கட்டணத்தை அடிப்படையாக கொண்டு சொத்து வரியை சென்னை மாநகராட்சி நிர்ணயித்து வரும் நிலையில் ஒவ்வோரு ஆண்டும் தெருக்கட்டணம் உயர்த்தப்படும் என்பது உறுதி ஆகியுள்ளது.

இதன் மூலம் சொத்து வரியும் தாமாக உயரும் என்பதால் சென்னை மாநகர மக்கள் அச்சத்தில் உறைந்துபோய் உள்ளனர். இதுதொடர்பாக அதிகாரிகள் கூறும்போது, ‘சென்னைக்கு மட்டும் இல்லாமல் அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்குமே இது பொருந்தும்’ என்றனர்.

Source: https://tamil.samayam.com/latest-news/chennai-news/chennai-corporation-said-property-tax-will-increase-every-year/articleshow/90843495.cms