சென்னையில் விஷவாயு தாக்கி 3 பேர் பரிதாபமாக உயிரிழப்பு – News18 தமிழ்

சென்னைச் செய்திகள்
சென்னை திருமுல்லைவாயிலில் தரைத்தளத்தில் இருந்த தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்யும்போது விஷவாயு தாக்கி 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

சென்னை திருமுல்லைவாயில் பகுதியில் விஷ வாயு தாக்கி வீட்டின் உரிமையாளர் மற்றும் பக்கத்து வீட்டுக்காரர் உள்பட 3 பேர் உயிரிழந்தனர். சிவசக்திநகரில் சம்புவிலிருந்து விஷ வாயு தாக்கியதில் பிரமோத், பிரேம்குமார், தந்தை பிரதீப் குமார் ஆகியோர் இறந்தனர்.

மேலும் தரைத்தள தண்ணீர் தொட்டியில் விஷவாயு தாக்கி உயிருக்கு போராடிய சாருநாதனுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.

Source: https://tamil.news18.com/news/tamil-nadu/chennai-district-3-death-in-poison-gas-attack-in-chennai-731432.html