மெட்ராஸ் யுனிவர்சிட்டியில் 23 காலிப்பணியிடம்… யார் விண்ணப்பிக்கலாம் என தெரிந்து கொள்ளுங்கள்..! – Tamil Samayam

சென்னைச் செய்திகள்

சென்னை பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள 23 உதவி பேராசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. வேலை தேடும் உதவி பேராசிரியர்கள் இப்போதே இதற்கான தகுதிகளை அறிந்து கொண்டு கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பு வழியாக ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் தங்களின் விண்ணப்பப்படிவத்தை 28.04.2022-க்குள் தபால் மூலம் ஆஃப்லைனில் விண்ணப்பிக்கலாம். மேலும், இது குறித்த விவரங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள விவரங்களை கவனமாக படிக்கவும்.

வேலைக்கான முழு விவரம்:

 • நிறுவனம் – சென்னை பல்கலைக்கழகம்.
 • பதவி – உதவிப் பேராசிரியர்.
 • வேலை வகை – TN அரசு வேலை.
 • காலியிட எண்ணிக்கை – 23.
 • பணியிடம் – சென்னை.
 • விண்ணப்பிக்கும் முறை – ஆஃப்லைன் (அஞ்சல் மூலம்).
 • அதிகாரப்பூர்வ இணையதளம் – https://www.unom.ac.in/.
 • விண்ணப்பிக்க கடைசி தேதி – 28.04.2022

காலிப்பணியிட விவரம்:

 • தமிழ் – 01.
 • ஆங்கிலம் – 02.
 • பொருளாதாரம் – 01.
 • அரசியல் அறிவியல் & பொது நிர்வாகம் – 01.
 • வணிகம் – 01.
 • உளவியல் – 02.
 • கணினி அறிவியல் – 01.
 • மேலாண்மை ஆய்வுகள் – 02.
 • இசை – 02.
 • பிரஞ்சு – 01.
 • இதழியல் – 02.
 • சமஸ்கிருதம் – 01.
 • சைவ சித்தாந்தம் – 01.
 • புவியியல் (B.Sc & M.Sc) – 02.
 • சமூகவியல் (BA & MA) – 02.
 • கிறிஸ்தவ ஆய்வுகள் – 01.

கல்வி தகுதி:

மேலே குறிப்பிட்டுள்ள பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் முதுகலையில் 55% மதிப்பெண்களுடன் Ph.D பட்டம் பெற்றிருக்க வேண்டும். இது குறித்த விரிவான தகவலுக்கு இங்கே கிளிக் செய்து அதிகாரபூர்வ அறிவிப்பை சரிபார்க்கலாம்.

உதவி பேராசிரியர் பதவிகளுக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாத சம்பளமாக ரூ. 30,000 வழங்கப்படும். இப்பதவிகளுக்கான விண்ணப்பக்கட்டணம் மற்றும் தேர்வு செயல்முறை ஆகியவற்றை அறிந்து கொள்ள மேலே இணைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும். விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் ஷார்ட் லிஸ்ட் செய்யப்பட்டு, தேர்வான விண்ணப்பதாரர்கள் மட்டுமே நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள்.

இப்பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள், சென்னை பல்கலைக்கழகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான hunom.ac.in-க்கு சென்று முதலில் விண்ணப்பப்படிவத்தை பதிவிறக்கவும். பின்னர், விண்ணப்பப்படிவத்தை பிழை இல்லாமல் நிரப்பி தேவையான ஆவணங்களை இணைக்கவும். இதையடுத்து, தேவைப்பட்டால் விண்ணப்பக்கட்டணத்தை செலுத்தவும். பின்னர், விண்ணப்பப்படிவத்தை “The Registrar, University of Madras, Chepauk, Chennai 600 005” என்ற முகவரிக்கு அஞ்சல் மூலம் அனுப்பிவைக்கவும்.

Source: https://tamil.samayam.com/jobs/govt-jobs/madras-university-recruitment-2022-apply-for-23-assistant-professor-vacancies-on-hunom-ac-in/articleshow/90846055.cms