இந்தியாவில் ஸ்டார்ட்அப் துறை வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் நிலையில், பெங்களூரு, டெல்லி ஆகியவை முதல் இரண்டு இடத்தைப் பிடித்து ஆதிக்கம் செலுத்தி வரும் நிலையில், 2021 ஆண்டின் பாதியில் இருந்து இந்தியாவின் பிற முக்கியமான நகரங்களில் இருக்கும் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் அதிகளவிலான முதலீட்டைப் பெற்று தாறுமாறான வளர்ச்சியை அடைந்து வருகிறது.
இதில் சற்றும் எதிர்பார்க்காத வகையில் சென்னை குறைந்த காலகட்டத்தில் மிகப்பெரிய அளவிலான வளர்ச்சியைப் பதிவு செய்து வருகிறது.
தமிழ்நாட்டுக்கு அடுத்த ஜாக்பாட்.. ஜோஸ்ட் இந்தியா புதிய தொழிற்சாலை..!

இந்திய ஸ்டார்ட்அப்
2021ஆம் ஆண்டில் இந்திய ஸ்டார்ட்அப் துறை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டாலும், அதிகளவிலான முதலீட்டை ஈர்த்துச் சிறப்பான முதலீட்டை ஈர்த்துள்ளது. 2021ஆம் ஆண்டில் மட்டும் சுமார் 42 பில்லியன் டாலர் அளவிலான முதலீட்டை ஈர்த்துப் புதிதாக 42 யூனிகார்ன் நிறுவனத்தை உருவாக்கியுள்ளது.

ஆரம்பமே அமர்க்களம்
இந்நிலையில் 2022ஆம் ஆண்டை இந்திய ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் மிகவும் வெற்றிகரமான துவங்கியுள்ளது என்று தான் சொல்ல வேண்டும். 2022ஆம் ஆண்டின் முதல் 3 மாதத்தில் மட்டும் சுமார் 11.8 பில்லியன் டாலர் முதலீட்டை இந்திய ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் ஈர்த்துள்ளது.

முதலீட்டின் அளவு
கடந்த வருடத்தின் இதே காலகட்டத்தை ஒப்பிடுகையில் முதலீட்டின் அளவு 186 சதவீதம் அதிகமாகும், இதேபோல் முதலீட்டு ஒப்பந்தத்தின் எண்ணிக்கை சற்றும் எதிர்பார்க்காத வகையில் 64 சதவீதம் அதிகரித்து அசத்தியுள்ளது.

டாப் ஸ்டார்ட் அப் நகரங்கள்
கடந்த ஆண்டு முதல் காலாண்டில் டாப் ஸ்டார்ட் அப் நகரங்களான பெங்களூர், டெல்லி என்சிஆர், மும்பை ஆகியவை 90 சதவீத முதலீட்டை பெற்ற நிலையில், தற்போது இந்த முதலீட்டு அளவு 78 சதவீதமாகக் குறைந்துள்ளது.

சென்னை மாஸ்
இந்நிலையில் சென்னையில் இந்த 3 மாத காலகட்டத்தில் மட்டும் சுமார் 26 முதலீட்டு ஒப்பந்தங்கள் மூலம் 1.1 பில்லியன் டாலர் முதலீட்டை பெற்று, முதலீட்டு அளவில் 473 சதவீத வளர்ச்சியும், ஒப்பந்தங்கள் பிரிவில் 271 சதவீத வளர்ச்சியும் பதிவு செய்துள்ளது.

4வது இடம்
2022ஆம் ஆண்டில் பெங்களூர் 5.7 பில்லியன் டாலர் முதலீட்டை பெற்று முதல் இடத்தைப் பிடித்த நிலையில், டெல்லி 1.9 பில்லியன் டாலர், மும்பை 1.4 பில்லியன் டாலர் உடன் 2 மற்றும் 3வது இடத்தைப் பெற்றது. 4வது இடத்தில் சிங்கம் போல் சென்னை 1.1 பில்லியன் டாலர் முதலீட்டை பெற்று அசத்தியுள்ளது.
சென்னையில் இனி எத்தனை யூனிகார்ன் என்று கணக்குப்போடும் காலம் வந்துள்ளது.
Chennai Emerge 4th top startup hub in India; 473 percent Jump In Funding
Chennai Emerge 4th top startup hub in India; 473 percent Jump In Funding சென்னை-க்கு இனி பொற்காலம்.. பெங்களூரை விரைவில் ஓரம்கட்டும்..!
Source: https://tamil.goodreturns.in/news/chennai-emerge-4th-top-startup-hub-in-india-473-percent-jump-in-funding-027734.html