சென்னை அணி வீரரின் திருமண கொண்டாட்டம் : வேஷ்டி சட்டையில் அசத்தும் தோனி- வைரலாகும் புகைப்படம் – தினத் தந்தி

சென்னைச் செய்திகள்

டோனி வேஷ்டி சட்டை அணிந்து உள்ள புகைப்படத்தை அணி நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

மும்பை,

ஐபிஎல் தொடரின் 15-வது சீசன் விறுவிறுப்பாக சென்று கொண்டு இருக்கிறது. இந்த தொடரில் நடப்பு சாம்பியனான சென்னை அணி 6 போட்டிகளில் விளையாடி 1 போட்டியில் மட்டுமே வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் 9-வது இடத்தில் உள்ளது.

இந்த நிலையில் சென்னை அணி வீரர்கள் தற்போது கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதற்கு காரணம் சென்னை அணியின் நியூசிலாந்து வீரர் டெவன் கான்வெ. அவருக்கு விரைவில் திருமணம் நடைபெற உள்ளது.

இதற்காக இன்று சென்னை அணி வீரர்கள் பாரம்பரியமாக வேஷ்டி சட்டை அணிந்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதற்காக சென்னை அணியின் முன்னாள் கேப்டன் டோனி வேஷ்டி சட்டை அணிந்து உள்ள புகைப்படத்தை அணி நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Source: https://www.dailythanthi.com/News/TopNews/2022/04/19000847/Chennai-team-player-wedding-celebration-MS-Dhoni-in.vpf