சென்னை மாநகராட்சியில் 4.6 டன் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பறிமுதல் – தினத் தந்தி

சென்னைச் செய்திகள்

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக்கை பயன்படுத்தியதற்காக ரூ.11.52 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சென்னை,

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள வணிக நிறுவனங்கள், அங்காடிகள், உணவகங்கள் உள்ளிட்ட இடங்களில் கடந்த 4 ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரை 4.6 டன் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

மேலும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக்கை பயன்படுத்தியதற்காக ரூ.11.52 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

Source: https://www.dailythanthi.com/News/TopNews/2022/04/20004124/46-tonnes-of-banned-plastic-seized-in-Chennai.vpf