சென்னை vs மும்பை: செந்தில், கவுண்டமணி காமெடியுடன் ஒப்பிட்டு ஐபிஎல் போட்டியை கலாய்த்த ஐபிஎஸ் அதிகாரி – Oneindia Tamil

சென்னைச் செய்திகள்

சென்னை: சென்னை சூப்பர் கிங்ஸ் – மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் லீக் போட்டி இன்று நடைபெற உள்ள நிலையில் அதை வைத்து ஐபிஎஸ் அதிகாரி விஜய் கார்த்திகேயன் வெளியிட்ட கிண்டல் ட்வீட் வைரலாகி வருகிறது.

ஐ.பி.எல். 2022 கிரிக்கெட் தொடர் கடந்த மாதம் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த ஆண்டு குஜராத் டைட்டன்ஸ், லக்னோ சூப்பர் ஜியண்ட்ஸ் ஆகிய 2 புதிய அணிகள் வருகை, முழு ஏலத்துக்கு பிறகு மாறிய கிரிக்கெட் அணிகளுடன் இந்த போட்டி நடந்து வருவதால் இதுவரை நடைபெற்ற ஐ.பி.எல். போட்டிகளில் இருந்து இந்த தொடர் முற்றிலும் மாறுபட்டு காணப்படுகிறது.

பீஸ்ட் படம் மூலம் நடிகர் விஜய் தவறு செய்துவிட்டார்! முதல்வர் தலையிட வேண்டும்! தமிமுன் அன்சாரி பேச்சுபீஸ்ட் படம் மூலம் நடிகர் விஜய் தவறு செய்துவிட்டார்! முதல்வர் தலையிட வேண்டும்! தமிமுன் அன்சாரி பேச்சு

சென்னை, மும்பை அணிகள்

முந்தைய ஐ.பி.எல். தொடர்கள் அனைத்திலும் கொடிகட்டிப் பறந்த முன்னாள் சாம்பியன்களான மும்பை இந்தியன்ஸ் அணியும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் இந்த ஐ.பி.எல். தொடரில் கடைசி இரண்டு இடங்களை பிடித்துள்ளன. முதல் 4 போட்டிகளில் இரு அணிகளும் போட்டிபோட்டு தோல்வியடைந்தது இரு அணி ரசிகர்களுக்கும் பேரதிர்ச்சியாக அமைந்தது.

ஜெர்க் வாங்கும் சென்னை

சினிமாவில் விஜய் – அஜித் போல் பேசப்பட்டு வந்த மும்பை – சென்னை அணிகள் இரண்டும் இம்முறை தோல்வியில் போட்டிபோட்டு வருகின்றன. முதல் 4 போட்டிகளில் தோல்வியடைந்த சென்னை அணி 5 வது போட்டியில் வென்றவுடன் மீண்டு வந்துவிட்டோம் என அந்த அணி ரசிகர்கள் சமூக வலைதளங்களில் ஆர்ப்பரிக்க தொடங்கினர். ஆனால், அடுத்த போட்டியில் தோற்று அந்த அணி ரசிகர்களுக்கு ஏமாற்றம் தந்தது.

பரிதாபகர நிலையில் பல்தான்ஸ்

மறுபக்கம் பல்தான்ஸ் என்று பெருமையாக அழைக்கப்பட்டு வந்த மும்பை இந்தியன்ஸ் அணி எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன் என்ற நகைச்சுவை காட்சியை நினைவுபடுத்தும் வகையில் தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறது. இதுவரை அந்த அணி இந்த தொடரில் 6 போட்டிகளில் விளையாடி ஒன்றில் கூட வெற்றிபெறாமல் பரிதாபகரமான நிலையில் உள்ளது.

முதல் 2 இடங்களில் சென்னை, மும்பை முன்னாள் வீரர்கள் அணி

அதே நேரம் மும்பையிலிருந்து சென்ற ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் அணி முதலிடத்தையும், சென்னையிலிருந்து சென்ற டூபிளஸ்ஸி தலைமையிலான பெங்களூரு அணி 2 வது இடத்திலும் உள்ளன. இந்த நிலையில், இன்று மும்பை – சென்னை இடையிலான போட்டியை மையமாக கொண்டு சமூக வலைதளங்களில் மீம்களை ரசிகர்களை தெறிக்கவிட்டு வருகின்றனர்.

ஐ.பி.எஸ். அதிகாரியின் கலாய் ட்வீட்

அவர்களுக்கு போட்டியாக ஐ.பி.எஸ். அதிகாரி விஜய்கார்த்திகேயனும் செந்தில் கவுண்டமணி நகைச்சுவை வீடியோவை பகிர்ந்து கிண்டல் செய்துள்ளார். செந்திலும் கவுண்டமணியும் நீண்ட நாட்களுக்கு பிறகு சந்தித்தபோது “ஒரு மந்தையில் இருந்த 2 ஆடுகள் வேறு வேறு பாதையில் போய்விட்டன. இரண்டும் சந்தித்தபோது பேசமுடியவில்லையே” என வடிவேலு சொல்லும் அந்த காட்சியை மும்பை – சென்னை போட்டியோடு ஒப்பிட்டு அவர் வெளியிட்டுள்ளார்.

English summary
IPS officer troll CSK vs MI match with Senthil, Goundamani comedy: சென்னை சூப்பர் கிங்ஸ் – மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் லீக் போட்டி இன்று நடைபெற உள்ள நிலையில் அதை வைத்து ஐபிஎஸ் அதிகாரி விஜய் கார்த்திகேயன் வெளியிட்ட கிண்டல் ட்வீட் வைரலாகி வருகிறது.

Source: https://tamil.oneindia.com/news/chennai/ips-officer-troll-csk-vs-mi-match-with-senthil-goundamani-comedy-455678.html