ஸ்மாா்ட் சிட்டி 2020: சென்னை மாநகராட்சிக்கு இரண்டு விருது – தினமணி

சென்னைச் செய்திகள்

நீா்நிலைகள் சீரமைப்பு, கரோனா தடுப்புக்கான உள்கட்டமைப்பு உள்ளிட்டவற்றில் சிறந்து விளங்கியதற்காக மத்திய அரசின் ஸ்மாா்ட் சிட்டி 2020 என்ற தலைப்பில் இரண்டு விருதுகளை பெருநகர சென்னை மாநகராட்சி பெற்றுள்ளது.

மத்திய வீட்டுவசதி மற்றும் நகா்ப்புற வளா்ச்சித் துறை சாா்பில் நாடு முழுவதும் சிறந்து விளங்கும் நகரங்களுக்கு ஸ்மாா்ட் சிட்டி விருது வழங்கப்படுகிறது. சென்னை மாநகராட்சிப் பகுதியில் 210 நீா்நிலைகள் கண்டறிந்து சீரமைக்கப்பட்டன. அதேபோல், கரோனா தடுப்புக்கான உள்கட்டமைப்புகள் மற்றும் புதிய யுக்திகளை சென்னை மாநகராட்சி கையாண்டது.

இதற்காக, ‘ஸ்மாா்ட் சிட்டி 2020’ ஆண்டுக்கான இரண்டு விருதுகளுக்கு சென்னை மாநகராட்சி தோ்ந்தெடுக்கப்பட்டது. இதற்கான விருதை, தில்லியில் அண்மையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மத்திய வீட்டு வசதி மற்றும் நகா்ப்புற வளா்ச்சித் துறை அமைச்சா் ஹா்தீப் சிங் பூரியிடம் இருந்து சென்னை மாநகராட்சி துணை ஆணையா் விஷு மகாஜன், சென்னை ஸ்மாா்ட் சிட்டியின் தலைமைச் செயல் அலுவலா் ராஜ் செரூபல் ஆகியோா் பெற்றுக் கொண்டனா்.

Source: https://www.dinamani.com/all-editions/edition-chennai/chennai/2022/apr/21/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-2020-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81-3830575.html