சென்னை மெட்ரோ ரயில் பயணிகளுக்கு பரிசுமழை – தினமணி

சென்னைச் செய்திகள்

சென்னை மெட்ரோ ரயில் பயணிகளுக்கு பரிசுமழை

கடந்த மாதம் சென்னை மெட்ரோ ரயிலில் பயணித்தவர்களில் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்ட 30 பயணிகளுக்கு பரிசு வழங்கப்படும் என்று சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

சென்னை மெட்ரோ ரயில் பயணிகளுக்கு ஒவ்வொரு மாதமும் ரூ.1 லட்சம் மதிப்பிலான பரிசு கூப்பன் அல்லது பரிசுபொருள் வழங்கப்படும் என்று சென்னை மெட்ரோ ரயில்நிர்வாகம் அறிவித்திருந்தது.

இதையும் படிக்க.. மரியுபோலில் புதைகுழிகளில் 3,000-9,000 பேர் புதைப்பு: அதிகாரிகள்

அதன்படி, மார்ச் 21 முதல் ஏப்ரல் 20 வரை பயணித்த பயணிகளுக்கான அதிர்ஷ்டக் குலுக்கல் கோயம்பேடு மெட்ரோ ரயில் நிலையத்தில் நடைபெற்றது.

ஒரு மாதத்தில் அதிகபட்சமாக பயணம் செய்த முதல் 10 பணிகளுக்கு தலா ரூ.2,000 மதிப்புள்ள பரிசு கூப்பன் அல்லதுபொருள் மற்றும் 30 நாள்களுக்கான விருப்பம் போல் பயணம் செய்வதற்கான மெட்ரோ பயண அட்டை (2,500 + 50)வழங்கப்படஉள்ளது.

இதுபோல, மாதம் ஒரு பரிவர்த்தனைக்கு ரூ.1500 மற்றும் அதற்கு மேல் பணம் செலுத்திய 10 பயணிகளுக்கு தலா ரு.2,000 மதிப்புள்ள கூப்பன் அல்லது பொருள் வழங்கப்படும்.

3. மெட்ரோ பயண அட்டை வாங்கி அதில் குறைந்தபட்சத் தொகையான ரூ.500க்கு டாப் அப் செய்த 10 பயணிகளுக்கு தலா ரு.1,450 மதிப்புள்ள இலவச டாப் அப் மற்றும் ரூ.2,000 மதிப்புள்ள கூப்பன் அல்லது பொருள் வழங்கப்படும்.

இவ்வாறு 30 பேர்களுக்கு மார்க் மெட்ரோ சார்பாக பரிசு அல்லது பரிசுக் கூப்பன் விரைவில் வழங்கப்படும்.

அடுத்த மாதத்துக்கான கூலுக்கல் மே 21ஆம் தேதி நடைபெறும். பரிசு விவரங்களை தெரிந்து கொள்ள மெட்ரோ ரயில் நிலைய கட்டுப்பாட்டாளர்களை அணுகுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
 

Source: https://www.dinamani.com/tamilnadu/2022/apr/22/gifts-for-chennai-metro-rail-passengers-3831607.html