இன்று சென்னை வருகிறார் மத்திய அமைச்சர் அமித்ஷா.. நாளை புதுவை செல்கிறார்! – Oneindia Tamil

சென்னைச் செய்திகள்

டெல்லி: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, புதுவையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள இன்று சென்னை வருகிறார்.

புதுவையில் நாளை நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக டெல்லியிலிருந்து இன்று இரவு 7 மணிக்கு சென்னை விமான நிலையம் வருகிறார். அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்க தமிழக பாஜக சார்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

பாஜகவினரின் வரவேற்பை ஏற்கும் அவர் காரில் ஆவடி மத்திய ரிசர்வ் பாதுகாப்பு படை வளாகத்திற்கு இன்று இரவு தங்குகிறார். இதைத் தொடர்ந்து நாளை காலை ஹெலிகாப்டரில் புறப்பட்டு புதுவை செல்கிறார்.

'ஹிஜாப் புர்கா' அணிந்து வர அனுமதி மறுத்ததா புதுவை அரசுப் பள்ளி? எதிர்த்து போராட்டம் ஏன்?‘ஹிஜாப் புர்கா’ அணிந்து வர அனுமதி மறுத்ததா புதுவை அரசுப் பள்ளி? எதிர்த்து போராட்டம் ஏன்?

ஸ்மார்ட் சிட்டி திட்டம்

அங்கு ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் குமரகுரு பள்ளத்தில் அடுக்குமாடி கட்டடம் கட்டவும் கிழக்கு கடற்கரை சாலையில் ரூ 70 கோடியில் புதிய பேருந்து நிலையம் அமைக்கவும் அடிக்கல் நாட்டுகிறார். தொடர்ந்து ரூ 30 கோடி செலவில் விழுபபுரம் தேசிய நெடுஞ்சாலை போடும் பணியைத் தொடங்கி வைக்கிறார். நாளை புதுவை வரும் அமித்ஷாவுக்கு எதிர்க்கட்சிகள் கருப்பு கொடி காட்டப் போவதாக அறிவித்துள்ளனர்.

ஹெலிகாப்டர்

நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு ஹெலிகாப்டரில் நாளை மாலையே சென்னை விமான நிலையம் வந்து டெல்லி செல்கிறார். புதுவையில் ஆளுநர் தமிழிசைக்கும் முதல்வர் ரங்கசாமிககும் இடையே எந்த பிரச்சினையும் இல்லாமல் ஆட்சி நடந்து வருகிறது.

பேட்டி அளித்த அமித்ஷா

இதை தமிழிசையே சில பேட்டிகளில் தெரிவித்துள்ளார். தற்போது அங்கு என்ஆர் காஙகிரஸ் – பாஜக தலைமையிலான கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது. புதுவையில் முக்கியத்துவம் வாய்ந்த பணிகளுக்கு முதல்வர் ரங்கசாமி, பாஜகவினரை நியமிக்கவில்லை என்ற அதிருப்தி கூட்டணியில் எழுந்துள்ளது.

ஆட்சி மாற்றம்

இதனால் ஆளுநர் தமிழிசை மூலம் ஆட்சி மாற்றத்தை பாஜக நிகழ்த்த போவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. இதற்காகதான் அமித்ஷா நாளை புதுவை செல்கிறார் என்றும் அவர் அதற்கான காய்களை நகர்த்துவார் என்று கூறப்படுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன் டெல்லி சென்று பிரதமர் மோடியையும் அமைச்சர் அமித்ஷாவையும் சந்தித்து பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Union Home Minister Amit Shah reaches Chennai today to attend programmes in Pondicherry.

Source: https://tamil.oneindia.com/news/delhi/union-home-minister-amit-shah-reaches-chennai-today-455815.html