சென்னை ஐஐடியில் மேலும் 25- பேருக்கு கொரோனா: ராதாகிருஷ்ணன் தகவல் – தினத் தந்தி

சென்னைச் செய்திகள்

சென்னை ஐஐடியில் மேலும் 25 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வு மற்றும் மருத்துவத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்

சென்னை

மக்கள் நல்வாழ்வு மற்றும் மருத்துவத்துறை செயலர் இன்று சென்னையில் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது;- “ சென்னை, ஐஐடி வளாகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட வர்களுடைய எண்ணிக்கை 55 ஆக உயர்ந்துள்ளது.

1,420 பேருக்கு பரிசோதனை செய்ததில் 55 பேருக்கு ஐஐடி வளாகத்தில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே 30 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில் இன்று மேலும் 25 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 

நோய் பாதிப்பு அதிகரித்தாலும் பரிசோதனைக்கு ஏற்ப நோய் பரவல் விகிதம் குறைவாகவே உள்ளது. தொற்று பாதித்த அனைவருக்கும் லேசான அறிகுறிகளே உள்ளன. தமிழகத்தில் இதுவரை எக்ஸ்.இ வகை கொரோனா பாதிப்பு கண்டறியப்படவில்லை.  அறிகுறிகள் தென்பட்டால் உடனே பரிசோதனைக்கு செல்ல வேண்டும்” என்றார். 

Source: https://www.dailythanthi.com/News/State/2022/04/23103335/25-more-tested-positive-in-chennai-IIT.vpf