சென்னை கோட்ட அணி சாம்பியன் – தினத் தந்தி

சென்னைச் செய்திகள்

திருச்சி, ஏப்.23-
தெற்கு ரெயில்வேயில் உள்ள ரெயில்வே பாதுகாப்பு படையினருக்கான தடகள போட்டி திருச்சி அண்ணா ஸ்டேடியத்தில் கடந்த 3 நாட்கள் நடந்தது. இதில் சென்னை, திருச்சி, மதுரை, பாலக்காடு, திருவனந்தபுரம், சேலம் ஆகிய 6்கோட்டங்களைச் சேர்ந்த வீரர்-வீராங்கனைகள் கலந்து கொண்டு தங்களது திறமையை வெளிப்படுத்தினர். போட்டிகளின் முடிவில் சென்னை கோட்ட அணி மொத்தம் 292 புள்ளிகளை பெற்று ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது. 277 புள்ளிகளை பெற்ற திருச்சி கோட்ட அணி 2-வது இடத்தை பிடித்தது. சிறந்த வீரராக ஆயிரத்து 654 புள்ளிகள் பெற்ற பிரஜேஷ் (திருவனந்தபுரம் கோட்டம்) தேர்வு செய்யப்பட்டார். சிறந்த வீராங்கனையாக ஆயிரத்து 563 புள்ளிகள் பெற்ற சுமி (சென்னை கோட்டம்) தட்டிச் சென்றார். பின்னர் நடந்த பரிசளிப்பு விழாவில் திருச்சி கோட்ட ரெயில்வே மேலாளர் மனிஷ்அகர்வால் கலந்து கொண்டு பரிசுகளை வழங்கினார்.

Source: https://www.dailythanthi.com/Sports/OtherSports/2022/04/23004654/Champion.vpf