ரூட்டை மாற்றிய அமித் ஷா.. இன்று இரவே சென்னை வருகை.. என்ன விஷயம் தெரியுமா? – Oneindia Tamil

சென்னைச் செய்திகள்

டெல்லி: பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொள்வதற்காக புதுச்சேரிக்கு வரும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா திடீரென சென்னை மார்க்கமாக வர இருப்பதாக அக்கட்சி அறிவித்துள்ளது.

நாளை புதுச்சேரியில் பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொள்வதற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஒருநாள் சுற்றுப்பயணமாக வருகிறார்.

இதற்கான பயண திட்டத்தில் கர்நாடக தலைநகர் பெங்களூரு விமான நிலையத்துக்கு வந்து, அங்கிருந்து புதுச்சேரி செல்ல முடிவெடுக்கப்பட்டு இருந்தது.

அதிர்ச்சி... டெல்லியில் 26 சதவீதம் அதிகரித்த கொரோனா... தலைநகர் வழியே தலை தூக்குகிறதா கோவிட்?அதிர்ச்சி… டெல்லியில் 26 சதவீதம் அதிகரித்த கொரோனா… தலைநகர் வழியே தலை தூக்குகிறதா கோவிட்?

கடைசி நேரத்தில் மாறிய திட்டம்

இன்று இரவு அமித்ஷா பயணம் மேற்கொள்ள இருக்கும் நிலையில் திடீரென திட்டம் மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறது. அதன் படி அவரது பயண திட்டத்தில் பெங்களூரு நீக்கப்பட்டு சென்னை என மாற்றப்பட்டு உள்ளது. இன்று மாலை டெல்லியிலிருந்து எல்லை பாதுகாப்பு படையின் தனி விமானத்தில் புறப்படும் அமித்ஷா இரவு 7:30 மணிக்கு சென்னை பழைய விமான நிலையம் வருகிறார்.

இரவு சென்னையில் தங்கும் அமித்ஷா

அங்கிருந்து பெரிய வரவேற்பு எதுவும் இன்றி உடனடியாக இரவு 7:35 மணியளவில் காரில் புறப்பட்டு ஆவடியில் இருக்கும் சி.ஆர்.பி.எஃப்-இன் முகாம் அலுவலகத்திற்கு இரவு 8:15 மணியளவில் அமித்ஷா சென்றடைகிறார். அங்குள்ள விருந்தினர் மாளிகையில் இரவு தங்க உள்ள அவர், நாளை காலை 8:35 மணியளவில் ஆவடியில் உள்ள விமான படைத்தளம் செல்கிறார்.

புதுச்சேரி நிகழ்ச்சிகள்

8:40 மணிக்கு சென்னையிலிருந்து புதுச்சேரிக்கு ஹெலிகாப்டரில் அவர் புறப்பட இருக்கிறார். காலை 9:30 மணியளவில் புதுச்சேரிக்கு சென்றடையும் அமித்ஷா அங்கு நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்றுவிட்டு, மாலை 5:30 மணியளவில் தனி ஹெலிகாப்டரில் புறப்படுகிறார். 6:15 மணியளவில் சென்னை பழைய விமான நிலையம் வந்தடையும் அமித்ஷா, அங்கிருந்து எல்லை பாதுகாப்புப் படையின் தனி விமானத்தில் டெல்லிக்கு திரும்பிச் செல்கிறார்.

சென்னை விமான நிலையத்தில் ஆய்வு

உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் பயண நேரம் திடீரென மாற்றப்பட்டதை தொடர்ந்து டெல்லியில் இருந்து சிறப்பு பாதுகாபுப் படை அதிகாரிகள் சென்னை விமான நிலையம் வந்தடைந்தனர். நேற்று மதியம் 1:30 மணியளவில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டத்தை நடத்தப்பட்டது. ஒரு மணி நேரம் நடைபெற்ற இந்த கூட்டத்தில், அமித்ஷா வருகையை முன்னிட்டு செய்யப்பட்டு இருக்கும் சிறப்பு ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகள் கேட்டறிந்தனர்.

English summary
Home minister Amitsha come to Puducherry through Chennai: பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொள்வதற்காக புதுச்சேரிக்கு வரும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா திடீரென சென்னை மார்க்கமாக வர இருப்பதாக அக்கட்சி அறிவித்துள்ளது.

Source: https://tamil.oneindia.com/news/delhi/home-minister-amitsha-come-to-puducherry-through-chennai-455842.html