சென்னை: புறநகர் ரயில் நடைமேடை மீது ஏறி விபத்து – தினமணி

சென்னைச் செய்திகள்

பணிமனையில் இருந்து கடற்கரை ரயில் நிலையம் வந்த மின்சார ரயில் கட்டுப்பாட்டை இழந்து, எதிரே நடைமேடையில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் இரண்டு பெட்டிகள் சேதமடைந்தன. நடைமேடையில் இருந்த கனசில கடைகள் சேதமடைந்தன.

சென்னை கடற்கரை-தாம்பரத்துக்கு இயக்குவதற்காக ஒரு மின்சார ரயில், பணிமனையில் இருந்து  கடற்கரை ரயில் நிலையத்துக்கு ஞாயிற்றுக்கிழமை மாலை 4.25 மணிக்கு வந்துகொண்டிருந்தது. இந்த ரயில், நிலையத்தின் ஒன்றாவது நடைமேடைக்கு வந்து கொண்டிருந்தது.

இந்த ரயிலை சங்கர் என்பவர் இயக்கினார். ஒன்றாவது நடைமேடைக்கு வந்தபோது, இந்த ரயில் திடீரென கட்டுப்பாட்டை இழந்து எதிரே இருந்து நடைமேடையில் ஏறி,கட்டடத் தில் மோதி நின்றது.

இதையும் படிக்க- சீனர்களுக்கு சுற்றுலா விசா அளிக்க தற்காலிக தடை…இந்தியா பதிலடி

இந்த சம்பவத்தின் போது,ரயிலில் யாரும் இல்லாததால் எந்தவித உயிர் சேதம் ஏற்படவில்லை. அதேநேரத்தில் ஓட்டுநர் காயமடைந்தார்.இந்த விபத்தில் இரண்டு பெட்டிகள் சேதமடைந்தன. மேலும், நடைமேடையில் இருந்த கடைகள் சேதமடைந்தன.

சேதமடைந்த பெட்டிகளை அகற்றும் பணியில் ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டு உள்ளனர். ஒன்றாம் நடைமேடைக்கு வரும் ரயில்கள் மாற்ற நடைமேடைகளில் இருந்து இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

இந்த விபத்து குறித்து ரயில் பாதுகாப்பு படை மற்றும் ரயில்வே போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
 

Source: https://www.dinamani.com/tamilnadu/2022/apr/24/chennai-electric-train-lost-control-and-crashed-3832844.html