சென்னை ஐஐடியில் உயரும் வைரஸ் பாதிப்பு.. தலைதூக்கும் கொரோனா? மீண்டும் தீவிரமாகும் கட்டுப்பாடுகள்? – Oneindia Tamil

சென்னைச் செய்திகள்

சென்னை: சென்னை ஐஐடி வளாகத்தில் உறுதி செய்யப்படும் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவது அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த 2020இல் இந்தியாவில் கொரோனா வைரசின் முதல் அலை ஏற்பட்ட நிலையில், அதன் பின்னர் 2021 டெல்டா கொரோனா காரணமாக நாட்டில் 2ஆம் அலை ஏற்பட்டது. டெல்டா கொரோனாவால் ஏற்பட்ட 2ஆம் அலை முதல் அலையைக் காட்டிலும் மோசமாகவே இருந்தது.

30 நாளுக்குள் 4 பேர் மர்ம மரணம்.. திகில் செய்தி சொன்ன மந்திரவாதி.. ஆந்திர கிராமத்தில் லாக்டவுன்! 30 நாளுக்குள் 4 பேர் மர்ம மரணம்.. திகில் செய்தி சொன்ன மந்திரவாதி.. ஆந்திர கிராமத்தில் லாக்டவுன்!

அதன் பின்னர் வைரஸ் பாதிப்பு சற்று குறைந்த நிலையில், கடந்த ஜனவரி மாதம் மீண்டும் ஓமிக்ரான் கொரோனா காரணமாக மூன்றாம் அலை ஏற்பட்டது. நல்வாய்ப்பாக முதல் 2 அலைகளைப் போல இல்லாமல் 3ஆம் அலை லேசான பாதிப்பையே ஏற்படுத்தியது.

கொரோனா கட்டுப்பாடுகள்

அதேபோல விரைவாகவே மூன்றாம் அலை மாநிலத்தில் கட்டுக்குள் வந்தது. இதையடுத்து மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் கொரோனா கட்டுப்பாடுகள் மெல்ல நீக்கப்பட்டு வந்தன. மாஸ்க் கட்டாயம் போன்ற கட்டுப்பாடுகளும் நீக்கப்பட்ட நிலையில், பொதுமக்கள் மெல்ல கொரோனாவுக்கு முந்தைய நிலையை நோக்கித் திரும்பி வந்தனர். இந்தச் சூழலில் தான் நாட்டில் சில பகுதிகளில் வைரஸ் பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கி உள்ளது.

முதல்வர் ஆலோசனை

தமிழ்நாட்டிலும் மெல்ல வைரஸ் பாதிப்பு உயரத் தொடங்கி உள்ளது. இது தொடர்பாக இன்றைய தினம் முதல்வர் ஸ்டாலின் கூட அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் உடன் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு இருந்தார். அப்போது பொது இடங்களில் மக்கள் மாஸ்க் அணிவதை உறுதி செய்ய மாவட்ட ஆட்சியர்கள் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் கேட்டுக்கொண்டிருந்தார்,

சென்னை ஐஐடி

இதற்கிடையே சென்னை ஐஐடி வளாகத்தில் ஏற்பட்டுள்ள கொரோனா பாதிப்பு குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளது. சென்னை ஐஐடி வளாகத்தில் இன்று ஒரே நாளில் மட்டும் 18 பேருக்குப் புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று வரை சென்னை ஐஐடியில் 60 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு இருந்தது. இதன் மூலம் இதுவரை சென்னை ஐஐடி வளாகத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 78ஆக உயர்ந்துள்ளது.

அமைச்சர் ஆய்வு

சமீபத்தில் தான் அமைச்சர் மா. சுப்பிரமணியன் மற்றும் சுகாதார செயலர் ராதாகிருஷ்ணன் சென்னை ஐஐடியில் ஆய்வு செய்தனர். அப்போது பேசிய அமைச்சர், சென்னை ஐஐடியில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களில் பெரும்பாலானோருக்கு லேசான பாதிப்பே ஏற்பட்டுள்ளதாகக் கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாட்டில் நேற்று மொத்தம் 52 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டது. மாநிலத்தில் இப்போது மொத்தம் 334 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

English summary
18 tests positive for coronavirus at the IIT Madras: (சென்னை ஐஐடியில் பதிவு செய்யப்படும் கொரோனா கேஸ்கள்) Madras IIT corona Cases latest updates in tamil.

Source: https://tamil.oneindia.com/news/chennai/18-people-tested-positive-for-coronavirus-in-madras-iit-456063.html