சென்னை; மின்சார ரெயில் கட்டுப்பாட்டை இழந்து நடை மேடையில் ஏறியதால் பரபரப்பு- பிரேக் செயலிழந்து விபத்து எனத் தகவல் – தினத் தந்தி

சென்னைச் செய்திகள்

சென்னை கடற்கரை ரெயில் நிலையத்தில் கட்டுப்பாட்டை இழந்து நடைமேடையில் ஏறி விபத்துக்கு உள்ளாகியுள்ளது.

சென்னை,

சென்னையில் புறநகர் மின்சார ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அலுவலகம்  செல்வோர், மாணவ மாணவிகள் என தினமும் ஆயிரக்கணக்கானோர் இந்த புறநகர் ரெயிலில் பயணித்து வருகின்றனர். இதனால், புற நகர் ரெயில் நிலையம் எப்போது பரபரப்புடன் காணப்படும். இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் பயணிகள் கூட்டம் வார நாட்களை விட இன்று சற்று குறைவாக இருக்கும். 

இந்த நிலையில், சென்னை கடற்கரை ரெயில் நிலையத்தில் கட்டுப்பாட்டை இழந்து நடைமேடையில் ஏறி விபத்துக்கு உள்ளாகியுள்ளது. பணிமனையில் இருந்து சென்னை கடற்கரை ரெயில் நிலையத்திற்கு சென்ற மின்சார ரெயில் கட்டுப்பாட்டை இழந்து நடைமேடையில் ஏறியதில் ரெயில் பெட்டிகள் சேதம் அடைந்துள்ளது. 

இந்த விபத்தில் ரெயிலின் ஓட்டுநர் காயம் அடைந்துள்ளார். நல்வாய்ப்பாக ரெயிலில் யாரும் இல்லாததால் பயணிகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.  பிரேக் பிடிக்காததால் விபத்து  ஏற்பட்டதாக முதல் கட்ட தகவல்கள் கூறுகின்றன. விபத்து குறித்து அதிகாரிகள் நேரில் வந்து ஆய்வு செய்து வருகின்றனர். 

Source: https://www.dailythanthi.com/News/State/2022/04/24165742/Electric-train-loses-control-in-Chennai.vpf