ஜஸ்ட் மிஸ்.. ஓடும் ரயிலில் தவறிவிழ போன பெண்! மின்னல் வேகத்தில் காப்பாற்றிய சென்னை பெண் போலீஸ்! சபாஷ் – Oneindia Tamil

சென்னைச் செய்திகள்

சென்னை: ரயில் நிலையத்தில் தவறி விழ சென்ற பெண்ணை, ஓடிச்சென்று போலீசார் காப்பாற்றிய சம்பவம் பெரும் பாராட்டை பெற்று வருகிறது. இது தொடர்பான வீடியோவும் வைரலாகி கொண்டிருக்கிறது.

image

சென்னை: ரயிலிலிருந்து தவறி விழுந்த நபர்…துரிதமாக செயல்பட்டு காப்பாற்றிய ரயில்வே பெண் போலீஸ்!

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து நேற்றிரவு திருச்சிக்கு மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ் ரயில் புறப்பட தயாராக இருந்தது.

அப்போது ரயில் புறப்பட நேரமாகி விட்டதால் பயணிகள் அவசர அவசரமாக ரயில் நிலையத்துக்கு ஓடிவந்து கொண்டிருந்தனர்.. மேலும் பலர் அடித்துப்பிடித்து ரயிலில் ஏறிக் கொண்டிருந்தனர்.

சென்னையில் மின்சார ரயில் நடைமேடையில் ஏறி விபத்து.. ரயில் ஓட்டுநர் மீது வழக்குப் பதிவுசென்னையில் மின்சார ரயில் நடைமேடையில் ஏறி விபத்து.. ரயில் ஓட்டுநர் மீது வழக்குப் பதிவு

பிளாட்பாரம்

அந்த பிளாட்பாரத்தில் ரயில்வே பெண் போலீஸ் மாதுரி என்பவர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்… சரியாக பதினொன்று முப்பது மணி அளவில் ரயிலும் புறப்பட்டது.. அப்போது, ரயிலில் இருந்து பெண் பயணி ஒருவர் திடீரென கீழே தவறி விழுந்தார்.. இதை பார்த்த பெண் போலீஸ் மாதுரி, ஓடோடிச் சென்று அந்த பயணியின் கையை பிடித்து நடைமேடைக்கு கொண்டு வந்தார்… அப்போது, எதிர்பாராத விதமாக பெண் போலீஸ் தடுமாறி கீழே விழுந்தார்.

சக்கரம்

ஆனாலும், உடனடியாக எழுந்து அந்த பெண் பயணியின் உயிரைக் காப்பாற்றி விட்டார்… அதாவது, ஏசி கம்பார்ட்மெண்டில் தவறுதலாக ஏறிவிட்டார் அந்த பெண்.. அவரை ஜெனரல் கம்பார்ட்மெண்டிற்கு மாறுவதற்காக இருக்கும் நேரத்தில்தான் ரயில் புறப்பட்டுவிட்டது.. இதனால்தான் அந்த பெண் பயணி தவறி விழுந்துவிட போனார்.. கொஞ்சம் விட்டிருந்தால், கீழே விழுந்து ரயிலின் சக்கரத்திற்குள் விழப் போயிருப்பார்.. ரயிலுக்கும், நடைமேடைக்கும் இடையே சிக்கிக்கொண்டார்.

மாதுரி

அப்போதுதான் பெண் போலீஸ் மாதுரி, தனியாக அவரை காப்பாற்றியுள்ளார். இந்த சிசிடிவி காட்சி இப்போது வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. பயணியின் உயிரை காப்பாற்றிய காவலர் மாதுரிக்கு அதிகாரிகள் பாராட்டு தெரிவித்தனர்… இதில் கொஞ்சம் விட்டிருந்தாலும் மாதுரிக்கும் ஆபத்து நேர்ந்திருக்கும்.. நல்லவேளையாக சுதாரித்துக் கொண்டு துணிச்சலாக மீட்பு பணியில் இறங்கிவிட்டார்.. சிக்கிய நபரை ஒற்றை கையால் இழுத்து காப்பாற்றினார்.

பாராட்டு

ரயில்வே போலீசார் மட்டுமல்லாமல், பெண் போலீசுக்கு பலதரப்பினரும் பாராட்டை தெரிவித்து வருகின்றனர்… பிளாட்பாரத்துக்கும் ரயிலுக்கும் நடுவே சிக்கிக் கொண்டவரை ரயில்வே பெண் காவலர் காப்பாற்றியது தொடர்பான சிசிடிவி காட்சிகள் சமூக வலைதள பக்கங்களில் வைரலாகி வரும் நிலையில், அந்த வீடியோ ஏராளமானோர் ஷேர் செய்தும் வருகிறார்கள்.

English summary
A passenger Rescued by Lady Railway Police Madhuri at Chennai egmore

Source: https://tamil.oneindia.com/news/chennai/a-passenger-rescued-by-lady-railway-police-madhuri-at-chennai-egmore-456094.html