முகம் முழுக்க பதற்றம்.. காரில் இருந்து இறங்கி.. வேகமாக ஓடி வந்த சென்னை மேயர் பிரியா.. நடந்தது என்ன? – Oneindia Tamil

சென்னைச் செய்திகள்

சென்னை: தன்னுடைய காரில் இருந்து இறங்கி சென்னை மேயர் பிரியா வேகமாக வெளியே ஓடும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

image

ராஜீவ் காந்தி மருத்துவமனையில் தீவிபத்து | சம்பவ இடத்துக்கு விரைந்த மேயர் பிரியா – வீடியோ

சென்னை ராஜீவ் அரசு பொது மருத்துவமனை சென்ட்ரல் பகுதியில் அமைந்துள்ளது. தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் இங்கே சிகிச்சை பெறுவது வழக்கம்.

பல நூறு பேர் உள்ளேயே தங்கி சிகிச்சை பெற்று வருகிறார்கள். தமிழ்நாட்டில் இருக்கும் மிக சிறப்பான மருத்துவமனைகளில் இதுவும் ஒன்றாகும்.

கவனமாக இருங்க.. சென்னையின் கவுன்சிலர்களுக்கு மேயர் பிரியா போட்ட முக்கிய ஆர்டர்.. பரபர உத்தரவு!கவனமாக இருங்க.. சென்னையின் கவுன்சிலர்களுக்கு மேயர் பிரியா போட்ட முக்கிய ஆர்டர்.. பரபர உத்தரவு!

ராஜீவ் காந்தி

இந்த நிலையில் ராஜீவ் காந்தி மருத்துவமனையில் இன்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது. கல்லீரல் சிகிச்சை பிரிவிற்காக அமைக்கப்பட்டு இருக்கும் பகுதியில் தீ விபத்து ஏற்பட்டது. அங்கு இருந்த ஆக்சிஜன் சிலிண்டர் வெடித்ததில் தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. தீ விபத்து ஏற்பட்ட சமயத்தில் உள்ளே சில நோயாளிகள் சிக்கிக்கொண்டதும் குறிப்பிடத்தக்கது.

தீ விபத்து

இந்த செய்தி வெளியானதும் உடனே சம்பவ இடத்திற்கு தீயணைப்பு படையினர் வந்தனர். அங்கு தீயை அணைக்கும் தீவிர முயற்சிகளில் அவர்கள் இறங்கினர். 2 மணி நேரமாக அங்கு தீயை அணைக்க தீயணைப்பு படையினர் தீவிரமாக முயன்றனர். இடைப்பட்ட நேரத்தில் உள்ளே இருந்த நோயாளிகள் உடனே வெளியேற்றப்பட்டனர்.

எப்படி பரவியது

மருத்துவமனையில் 2-வது அடுக்குமாடி கட்டடத்தின் பின்பகுதியில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் முன்பக்கம் வழியாக மக்கள் வெளியேற்றப்பட்டனர். மளமளவென தீ பரவ தொடங்கிய நிலையில் தீயணைப்பு படையினர் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த நிலையில் விவரம் அறிந்து ராஜீவ் அரசு பொது மருத்துவமனைக்கு மேயர் பிரியா உடனே வந்தார்.

மேயர் பிரியா

தீ விபத்து ஏற்பட்ட 30 நிமிடத்தில் அவர் சம்பவ இடத்திற்கு வந்தார். அலுவல் ரீதியாக ஆய்வு பணி ஒன்றில் இருந்தவருக்கு இந்த தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அவர் வேகமாக காரில் ராஜீவ் அரசு பொது மருத்துவமனைக்கு வந்தார். அதோடு கையில் போனை வைத்துக்கொண்டு.. காரில் இறந்து இறங்கி தீ விபத்து ஏற்பட்ட இடத்திற்கு அவர் வேகமாக ஓடி சென்றார்.

ஓடி வந்த பிரியா

காரில் இருந்து இறங்கிய பிரியா வேகமாக பதற்றத்துடன் ஓடிய காட்சிகள் வீடியோவாக வெளியாகி உள்ளது. போகிற வழியில் மருத்துவமனை ஊழியர்கள்.. பிரியா மேடம் என்று கூறி அவர்களை வரவேற்றனர். அவர்களிடம் தலையை அசைத்துவிட்டு நேரடியாக உள்ளே சென்று தீயணைப்பு வீரர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார். முதல்வர் ஸ்டாலின் தஞ்சாவூர் தேர் விபத்து பகுதிக்கு சென்றுள்ளதால் இங்கே வர முடியவில்லை.

English summary
Ran like anything out of the car: How mayor Priya visited Rajiv Gandhi Hospital? தன்னுடைய காரில் இருந்து இறங்கி சென்னை மேயர் பிரியா வேகமாக வெளியே ஓடும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

Source: https://tamil.oneindia.com/news/chennai/ran-like-anything-out-of-the-car-how-mayor-priya-visited-rajiv-gandhi-hospital-456288.html