கோடை காலத்தையொட்டி சென்னை ஐகோர்ட்டுக்கு ஜூன் 5ந் தேதி வரை விடுமுறை – Maalaimalar தமிழ்

சென்னைச் செய்திகள்

விடுமுறை கால நீதிமன்றத்தில் 20 நீதிபதிகள் வழக்குகளை விசாரிக்கின்றனர். மதுரை கிளையில் 15 நீதிபதிகள் வழக்குகளை விசாரிக்கிறார்கள்.

சென்னை:

சென்னை ஐகோர்ட்டு மற்றும் மதுரை கிளைக்கு ஆண்டு தோறும் மே மாதம் விடுமுறை விடுவது வழக்கம். அதன்படி மே மாதம் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மே 1ந் தேதியில் இருந்து ஜூன் 5ந்தேதி வரை சென்னை ஐகோர்ட்டு மற்றும் மதுரை கிளைக்கும் விடுமுறை விடப்பட்டுள்ளது.

ஜூன் 6ந் தேதி முதல் கோர்ட்டு பணிகள் தொடங்கப்படும். விடுமுறை காலத்தில் மே முதல் வாரத்தில் மட்டும் திங்கள், புதன்கிழமை மனு தாக்கல் செய்யலாம். அந்த மனுக்கள் வியாழக்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமைக்கு எடுத்துக் கொள்ளப்படும்.

மே மாதத்தின் பிற வாரங்களில் திங்கள், செவ்வாய்க்கிழமைகளில் மனு தாக்கல் செய்யலாம். அந்த மனுக்கள் புதன், வியாழன் அன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும். விடுமுறை கால நீதிமன்றத்தில் 20 நீதிபதிகள் வழக்குகளை விசாரிக்கின்றனர். மதுரை கிளையில் 15 நீதிபதிகள் வழக்குகளை விசாரிக்கிறார்கள்.

சென்னை ஐகோர்ட்டு பதிவுத்துறை இந்த அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.

Related Tags :

[embedded content]

Source: https://www.maalaimalar.com/news/district/2022/04/30101005/3728139/Madras-HC-Holiday-till-on-June-5th.vpf