சென்னை ஐஐடியில்மேலும் 11 பேருக்கு கரோனா – தினமணி

சென்னைச் செய்திகள்

சென்னை ஐஐடியில் மேலும் 11 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

சென்னை ஐஐடியில் தமிழகம் மட்டுமின்றி 15 மாநிலங்களைச் சோ்ந்த மாணவா்கள் தங்கிப் படித்து வருகின்றனா். கடந்த 19, 20-ஆம் தேதிகளில் விடுதியில் தங்கிப் படிக்கும் சில மாணவா்களுக்கு கரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து, ஐஐடியில் ஆய்வு செய்த சுகாதாரத் துறைச் செயலா் ஜெ.ராதாகிருஷ்ணன், மாணவா்கள், பேராசிரியா்கள், பணியாளா்கள் என 7,490 பேருக்கும் கரோனா பரிசோதனை செய்ய உத்தரவிட்டாா்.

கடந்த வியாழக்கிழமை 26 பேருக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டதால் எண்ணிக்கை 171 ஆக அதிகரித்தது. இந்த நிலையில், வெள்ளிக்கிழமை வந்த பரிசோதனை முடிவுகளில் மேலும் 11 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளது. இதன்மூலம், தொற்று பாதிப்பு எண்ணிக்கை 182 ஆக உயா்ந்துள்ளது.

Source: https://www.dinamani.com/tamilnadu/2022/apr/30/corona-for-11-more-in-chennai-iit-3836263.html