சென்னை மெட்ரோ ரயிலில் பணிபுரிய வேலைவாய்ப்பு! – Zee Hindustan தமிழ்

சென்னைச் செய்திகள்

சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட்டில் காலியாகவுள்ள 14 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. ஒப்பந்தம் மற்றும் பிரதிநிதித்துவ அடிப்படையில் சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட்டில் உள்ள 14 பதவிகளுக்கான ஆட்சேர்ப்பு குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டு இருக்கிறது.  

மேலும் படிக்க | வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு; இன்று முதல் 3 நாட்களுக்கு விடுமுறை

பதவிகள் :

1) பொது மேலாளர் (சிக்னலிங் & டெலிகாம்) -1

2) பொது மேலாளர் (செயல்பாடுகள் ) -1

3) பொது மேலாளர் (மின்சாரம்) -1 

4) பொது மேலாளர் (மனித வளம்) -1

5) பொது மேலாளர் ( திட்டம் & வணிக மேம்பாடு) -1

6) கூடுதல் பொது மேலாளர் (அண்டர்க்ரவுண்ட் கன்ஸ்ட்ரக்ஷன்) -2

7) கூடுதல் பொது மேலாளர் (ஐடி & ஏஅப்சி) -1

8) ஜாயிண்ட் பொது மேலாளர் ( அண்டர்க்ரவுண்ட் கன்ஸ்ட்ரக்ஷன்) -1

9) ஜாயிண்ட் பொது மேலாளர் ( கட்டடக்கலை) -2

10) துணை பொது மேலாளர் (மார்க்கெட்டிங்) -1

11) துணை மேலாளர் (போக்குவரத்து ) -1

12) தலைமை விஜிலென்ஸ் அதிகாரி -1

விண்ணப்பிக்கும் முறை :

விண்ணப்பங்கள் ஆப்லைன் மூலம் வரவேற்கப்படுகின்றன.  கல்வி தகுதி சான்றிதழ், அனுபவ சான்றிதழ், பிறப்பு சான்றிதழ் மற்றும் சாதி சான்றிதழ் போன்றவற்றுடன் தற்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களையும் விண்ணப்ப படிவத்துடன் இணைத்து விண்ணப்ப கட்டணத்தையும் செலுத்த வேண்டும்.

விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி :

ஜாயிண்ட் பொது மேலாளர் (ஹெச்ஆர்)
சென்னை ரயில் மெட்ரோ லிமிடெட்,
சிஎம்ஆர்ஐ டிப்போ,
நிர்வாக கட்டிடம்,
பூந்தமல்லி ஹை சாலை,
கோயம்பேடு,
சென்னை-600107.

விண்ணப்பங்களை மேற்கண்ட முகவரிக்கு மே-14ம் தேதிக்குள் அனுப்பிவைக்க வேண்டும்.

மேலும் படிக்க | May 2022: மே மாதம் இவற்றில் எல்லாம் முக்கிய மாற்றம், விவரம் இதோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link – https://bit.ly/3hDyh4G

Apple Link – https://apple.co/3loQYeR

Source: https://zeenews.india.com/tamil/lifestyle/job-vacancy-in-chennai-metro-railway-station-391332