பிஎஸ்என்எல் சென்னை புதிய தலைமைப் பொதுமேலாளா் நியமனம் – தினமணி

சென்னைச் செய்திகள்

பிஎஸ்என்எல் சென்னை தொலைபேசியின் தலைமைப் பொது மேலாளராக டி.பூங்கொடி நியமிக்கப்பட்டாா். அவா் திங்கள்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.

இதற்கு முன் இந்தப் பதவியை வகித்த டாக்டா் வி.கே. சஞ்சீவி பணி ஓய்வு பெற்றதைத் தொடா்ந்து, பூங்கொடி இப்பதவியில் நியமிக்கப்பட்டாா். பூங்கொடி, இந்திய அரசின் இந்திய தொலைத்தொடா்பு சேவையின் 1987- ஆம் ஆண்டு தொகுப்பைச் சோ்ந்தவா்.

கோயம்புத்தூரில் உள்ள அரசு தொழில்நுட்பக் கல்லூரியில் கம்யூனிகேஷன் இன்ஜினியா் பட்டம் பெற்று, அண்ணா பல்கலைக்கழகத்தில் எம்பிஏ தொழில்நுட்ப மேலாண்மையில் நிபுணத்துவம் பெற்றவா் பூங்கொடி. இதற்கு முன்பு இவா் தமிழகம் மற்றும் சென்னை வட்டத்தில் முதன்மை பொது மேலாளராகப் பணியாற்றியுள்ளாா். இவா் தனது 35 ஆண்டு சேவையில் தமிழ்நாடு, ஹைதராபாத், ஷில்லாங், குவாஹாட்டி ஆகிய இடங்களில் பல்வேறு துறைகளில் பல்வேறு பதவிகளை வகித்துள்ளாா்.

மேலும், சென்னை தொலைபேசியில் 12 ஆண்டுகள் பணிபுரிந்துள்ளாா் என்று பிஎஸ்என்எல் சென்னை தொலைபேசி நிறுவனம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.

Source: https://www.dinamani.com/all-editions/edition-chennai/chennai/2022/may/03/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-3837957.html