சென்னை: புதைவட மின்கம்பி அமைக்கும் பணி தீவிரம் – Tamil Murasu

சென்னைச் செய்திகள்

சென்னை: மிக விரை­வில் சென்னை மாந­க­ராட்­சி­யின் அனைத்­துப் பகு­தி­க­ளி­லும் மேலே செல்­லும் மின் கம்­பி­களை புதை­வ­டங்­க­ளாக மாற்­றும் பணி­களை நூறு விழுக்­காடு அளவு நிறைவு செய்ய வேண்­டும் என்று முதல்­வர் உத்­த­ர­விட்­டுள்­ள­தாக மின்­சா­ரத்­துறை அமைச்­சர் செந்­தில் பாலாஜி தெரி­வித்­துள்­ளார்.

சட்­டப்­பே­ர­வை­யில் நேற்று கேள்வி நேரத்­தின்­போது புதை­வட மின்­கம்­பி­கள் அமைப்­பது தொடர்­பாக கார்த்­தி­கே­யன் எம்­எல்ஏ கேள்வி எழுப்­பி­னார்.

அதற்­குப் பதில் அளித்த அமைச்­சர் செந்­தில் பாலாஜி, சென்­னை­யில் பெரம்­பூர், தாம்­ப­ரம், ஆவடி, அடை­யாறு, தக­வல் தொழில்­நுட்ப சாலை ஆகிய ஐந்து கோட்­டங்­களில் நடப்­பாண்டு செப்­டம்­பர் மாதத்­திற்­குள் புதை­வட மின்­கம்­பி­கள் அமைக்­கும் பணி முழு­மை­யாக நிறை­வ­டை­யும் என்­றார்.

“அடுத்த ஆண்டு மேலும் ஏழு கோட்­டங்­க­ளுக்கு திட்ட மதிப்­பீடு தயார் செய்­யப்­பட்­டுள்­ளது. முதற்­கட்­ட­மாக சென்னை மாந­க­ராட்சி முழு­வ­தும் இந்­தப் பணி­கள் நிறைவு செய்­யப்­பட்­ட­பி­றகு மற்ற மாந­க­ராட்­சி­களில் படிப்­ப­டி­யாக நிறை­வேற்­றப்­படும்.

தமி­ழ­கத்­தின் பல்­வேறு பகு­தி­களில் கோடை­கா­லத்­தில் முன் அறி­விப்பு இன்றி அவ்­வப்­போது மின்­தடை ஏற்­ப­டு­வ­தா­கப் பொது­மக்­கள் புகார் எழுப்பி வரு­கின்­ற­னர். இதை­ய­டுத்து பல்­வேறு நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்டு வரும் மின்­சார வாரி­யம், தடை­யற்ற மின்­சா­ரம் வழங்­கு­வதை தொடர்ந்து உறுதி செய்து வரு­வ­தா­கக் கூறு­கிறது. இந்நிலையில், சென்னையில் பல்வேறு பகுதிகளில் புதைவட மின்கம்பிகள் அமைக்கும் பணி துரித கதியில் நடைபெறுவதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Source: https://www.tamilmurasu.com.sg/tamilnadu/story20220507-88364.html