சென்னை – திருவள்ளூர் புறநகர் ரயில் சேவை பாதிப்பு – தினமணி

சென்னைச் செய்திகள்

சென்னை – திருவள்ளூர் புறநகர் ரயில் சேவை பாதிப்பு (கோப்புப்படம்)

சென்னை: சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் இன்று அதிகாலை முதலே லேசானது முதல் பலத்த மழை பெய்த வருகிறது. இதனால், சிக்னல் கோளாறு ஏற்பட்டு சென்னை – திருவள்ளூர் புறநகர் மின்சார ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

மழையால் சிக்னல் கோளாறு ஏற்பட்டதால், ரயில்கள் புறப்பாடு தாமதமாகியுள்ளது. ரயில்கள் ஆங்காங்கே நின்று செல்கின்றன.

சிக்னல் கோளாறு காரணமாக, ரயில்கள் தாமதமாக இயக்கப்படுகிறது. இதனால், காலை வேளையில் பணிக்குச் செல்வோர் கடும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர்.
 

Source: https://www.dinamani.com/tamilnadu/2022/may/10/chennai—tiruvallur-suburban-train-service-affected-3841899.html