சென்னை நனைகிறது; மே மாதம் பனிக்கட்டியாகிறது – கவிஞர் வைரமுத்து டுவீட் – தினத் தந்தி

சென்னைச் செய்திகள்

சென்னையில் இன்று பெய்த மழை குறித்து கவிஞர் வைரமுத்து டுவிட்டரில் வர்ணித்துள்ளார்.

சென்னை,

சென்னை மற்றும் புறநகர் பகுதியில் நள்ளிரவு முதல் மழைத் தூறல் போட ஆரம்பித்தது. அதிகாலையில் ஒரு சில இடங்களில் கன மழையும், பல பகுதிகளில் லேசாகவும் பெய்தது. விட்டு விட்டு தூறலாக பெய்த மழை காலை 6 மணி முதல் நகரின் பல்வேறு பகுதிகளில் திடீரென கன மழையாக பெய்தது.

கோடை வெயிலின் வெப்பம் சென்னை வாசிகளை வீடுகளில் முடக்கி வைத்திருந்த நிலையில் திடீர் மழை குளிர வைத்துள்ளது. குளிர்ந்த காற்றும், மழை தூறலும் இருந்ததால் வெப்பம் தணிந்தது.

நீண்ட நாட்களுக்கு பிறகு சென்னையில் மழை பெய்து வருவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். அவ்வப்போது மழை லேசாக தூறிக் கொண்டும், மேகங்கள் சூழ்ந்து இதமான சூழல் இருந்து வருகின்றன.

இந்த நிலையில் சென்னையில் இன்று பெய்த மழை குறித்து கவிஞர் வைரமுத்து வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்,

சென்னை நனைகிறது; மே மாதம் பனிக்கட்டியாகிறது. 

ஆடையோடு குளியல் கொள்ளும் தாவரங்கள்

மழை ஓசை எல்லா சங்கீதங்களையும் சாகடிக்கிறது. நுரையீரலில் நிறைகிறது மழைவாசனை. நான் என் தேநீருக்குள் சுடவைத்துக் கொண்டிருக்கிறேன் ஒரு பாடலை” என்று பதிவிட்டுள்ளார்.

Source: https://www.dailythanthi.com/News/TopNews/2022/05/10120300/Chennai-is-getting-wet-May-is-freezing–Poet-Vairamuthu.vpf