சென்னை செஸ் ஒலிம்பியாட்: இதுவரை 100 நாடுகள் பதிவு | Chennai Chess Olympiad: 100 countries registered so far – hindutamil.in – Hindu Tamil

சென்னைச் செய்திகள்

சென்னை: சென்னை செஸ் ஒலிம்பியாட் போட்டியில் கலந்து கொள்ள இதுவரை 100 நாடுகள் பதிவு செய்துள்ளதாக அகில இந்திய செஸ் அமைப்பு தெரிவித்துள்ளது.

44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் ஜூலை 28ம் தேதி முதல் ஆகஸ்டு 10ம் தேதி வரை நடைபெறுகிறது. போட்டியை நடத்தும் நாடு என்பதால் இந்தியா சார்பில் ஓபன் மற்றும் பெண்கள் பிரிவில் தலா 2 அணிகள் களம் இறங்குகின்றன. இந்திய அணியின் ஆலோசகராக 5 முறை உலக சாம்பியனான தமிழகத்தை சேர்ந்த விஸ்வநாதன் ஆனந்த் நியமிக்கப்பட்டுள்ளார். இந்திய அணிக்காக பயிற்சி சென்னையில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இந்த போட்டியில் பங்கேற்க இதுவரை 100 நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் பதிவு செய்துள்ளனர். இதன்படி 101 ஓபன் அணிகள் மற்றும் 86 பெண்கள் அணி என்று மொத்தம் 100 நாடுகளைச் சேர்ந்த 187 நாடுகள் இதுவரை பதிவு செய்துள்ளதாக அகில இந்திய செஸ் அமைப்பு தெரிவித்துள்ளது.

Source: https://www.hindutamil.in/news/sports/798957-chennai-chess-olympiad-100-countries-registered-so-far.html