பயணி தாக்கியதில் அரசு பஸ் நடத்துனர் பலி – தினத் தந்தி

சென்னைச் செய்திகள்

சென்னையில் இருந்து விழுப்புரம் நோக்கி சென்ற அரசு பஸ்சில் பயணி தாக்கி நடத்துநர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை,

சென்னையிலிருந்து விழுப்புரம் சென்று கொண்டிருந்த பஸ்சில் பயணித்த பயணி ஒருவருக்கும் நடத்துநருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

அந்த தகராறில் போதையிலிருந்த பயணி தாக்கியதில் அரசு பஸ்  நடத்துநர் பெருமாள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். பஸ் செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூர் அருகே வந்து கொண்டிருந்தபோது இந்த தகராறு ஏற்பட்டதாகவும் இதனால் நடத்துநர் அடித்து கொல்லப்பட்டதும் தெரியவந்துள்ளது. உயிரிழந்த நடத்துநர் பெருமாள் கள்ளக்குறிச்சியைச் சேர்ந்தவர் என்பதும், விழுப்புரம் பணிமனையில் பணியாற்றி வந்துள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது.

நடத்துநரை அடித்துக்கொன்று விட்டு பஸ்சில் இருந்து தப்பி ஓடிய போதை பயணியை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். 

Source: https://www.dailythanthi.com/News/TopNews/2022/05/14082458/Passenger-killed-in-Chennai-government-bus-passenger.vpf