சென்னை, காசிமேட்டில் மீன்களின் விலை அதிகரிப்பு – தினத் தந்தி

சென்னைச் செய்திகள்

சென்னை, காசிமேட்டில் மீன்களின் வரத்து குறைவால் விலை அதிகரித்துள்ளது.

சென்னை,

சென்னை காசிமேடு மீன் சந்தையில் மீன்களின் விலை அதிகரித்துள்ளது. வஞ்சிரம் மீன் ஒரு கிலோ 1,300 ரூபாய் வரை விற்கப்படுகிறது. 

அதேபோல பண்ணை எறா 150 ரூபாய் முதல் 500 ரூபாய் வரையிலும், நண்டு 300 ரூபாய் முதல் 800 ரூபாய் வரையிலும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

மீன்களின் வரத்து குறைவு காரணமாக மீன்களின் விலை அதிகரித்து கானப்படுவதாக வியாபாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.

Source: https://www.dailythanthi.com/News/State/2022/05/15083911/Increase-in-fish-prices-in-Chennai-and-kasimedu.vpf