வாட்ஸ் ஆப் மூலம் அழகிகள் விற்பனை.. ஒரு மணி நேரத்திற்கு ரூ 40 ஆயிரம்.. பதைபதைக்கும் சென்னை! – Oneindia Tamil

சென்னைச் செய்திகள்

சென்னை: சென்னையில் கடந்த பல ஆண்டுகளாக நடந்து வரும் வாட்ஸ் ஆப் விபச்சாரத்தில் அதன் புரோக்கர்கள் சிக்கியது எப்படி என்பது குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழகத்தில் விபச்சாரம் செய்வது சட்டவிரோதம். இதனால் பலர் இதை இலை மறைவாக காய் மறைவாக செய்து வந்தார்கள். ஆனால் தொழில்நுட்பம் வளர வளர இந்த பெண்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்தும் கும்பலும் திருட்டுத்தனத்தை வளர்த்துக் கொண்டார்கள்.

டெல்லி, கர்நாடகாவில் ராக்கெட் விபச்சாரம் நடைபெற்று வருகிறது. இதை தடுக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர கண்காணிப்பு நடத்தப்பட்டு வருகிறது. எனினும் திணுசு திணுசாக விபச்சாரத்தை செய்கிறார்கள்.

210 சவரன் போலி நகைகள்... சென்னை வங்கியில் ரூ.32 லட்சம் மோசடி - 4 ஆண்டுக்கு பின் சிக்கிய பலே கும்பல்210 சவரன் போலி நகைகள்… சென்னை வங்கியில் ரூ.32 லட்சம் மோசடி – 4 ஆண்டுக்கு பின் சிக்கிய பலே கும்பல்

கர்நாடகா

கடந்த வாரம் கர்நாடகாவில் ஒரு கழிவறைக்குள் ரகசிய அறை வைத்து விபச்சாரம் நடந்ததை நாம் அறிவோம். அது போல் இந்த வாரம் சென்னையில் வாட்ஸ் ஆப் மூலம் அழகிகள் மணிக்கணக்கில் விற்பனை செய்யப்பட்டு விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்படுகிறார்கள். அழகிகளுடன் வாடிக்கையாளர் இருக்க ஒரு மணி நேரத்திற்கு ரூ 20 ஆயிரம் முதல் ரூ 40 ஆயிரம் வரை கட்டணம் நிர்ணயிக்கப்படுகிறது.

10 ஆண்டுகளுக்கு மேலாக

கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக ஒடிஸா மாநிலம் புவனேஸ்வரிலிருந்து சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் ஜோதி ரஞ்சன் ஜனா மற்றும் கிருஷ்ணா சந்திரா ஸ்வை ஆகியோர் வலைதளம் வழியாக விபச்சாரம் நடத்தி வந்தனர். இவர்கள் மீது சென்னை முழுவதும் உள்ள காவல் நிலையங்களில் வழக்குகள் உள்ளன.

கண்களில் மண்ணை தூவிய புரோக்கர்கள்

ஆனால் 10 ஆண்டுகளாக போலீஸார் கண்களில் மண்ணை தூவி தப்பி வந்தனர். பிரபல டேட்டிங் செயலி மூலம் விபச்சாரம் செய்ய பிரத்யேக வாட்ஸ் ஆப் எண் கொடுத்து தங்களை தொடர்பு கொள்ள சொல்கிறார்கள். அவ்வாறு தொடர்பு கொள்ளும் நபர்களுக்கு விபச்சார அழகிகளின் ஆபாச புகைப்படங்கள் வாட்ஸ் ஆப்பிற்கு செல்லும்.

சென்னை நட்சத்திர ஹோட்டல்கள்

இதையடுத்து சென்னையில் கிண்டி, நுங்கம்பாக்கம், தி நகர் உள்ளிட்ட பகுதிகளில் ஆன்லைன் மூலம் ஸ்டார் ஹோட்டல்களை புக் செய்வராம். இவர்களது நெட்வொர்க்குடன் கல்லூரி மாணவிகள், குடும்பத் தலைவிகள், சினிமா நட்சத்திரங்கள் உள்ளிட்டோர் இணைக்கப்பட்டிருக்கிறார்கள்.

ஆண்டு வருமானம்

இ்நத புரோக்கர்களின் ஆண்டு வருமானம் மட்டும் கோடிக்கணக்கில் இருக்குமாம். இந்த நிலையில் 10 ஆண்டுகளாக தேடப்பட்டு வந்த இரு புரோக்கர்களும் புவனேஸ்வரத்தில் இருப்பதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அங்கு சென்ற தமிழக போலீஸாரை பார்த்ததும் காரில் தப்பியோடிய இருவரையும் 20 கிமீ. வரை சேஸிங் செய்து பிடித்துள்ளனர்.

போலீஸிடம் சிக்காமல் இருக்க..

அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் போலீஸிடம் சிக்காமல் இருக்க பல்வேறு தில்லாலங்கடி வேலைகளை செய்துள்ளது தெரியவந்தது. ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒரு செல்போன். அவ்வப்போது வாட்ஸ் ஆப் குருப்புகளை கலைத்து விட்டு புதிய குரூப்புகளை உருவாக்குவது. தொலைபேசியிலிருந்து இரு ரிங் கொடுத்துவிட்டு கட் செய்துவிட வேண்டும். அதன்பிறகு ஒரு மணி நேரத்திற்கு பிறகு எந்த ரிங்கும் வராவிட்டால் உடனடியாக ஹோட்டலை காலி செய்துவிட்டு தப்பிவிடுவது என அறிவுறுத்தப்பட்டிருந்தனர். இந்த நிலையில் இருவரிடமும் மேற்கொண்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

English summary
Chennai police arrested 2 brokers who has a Whatsapp group to do prositution.

Source: https://tamil.oneindia.com/news/chennai/how-did-2-brokers-arrested-in-chennai-prostitution-458440.html