சென்னை: பைனான்ஸியரை சாலையில் ஓட ஓட விரட்டி வெட்டிப் படுகொலை செய்த கும்பல் – பட்டப்பகலில் பயங்கரம் – Vikatan

சென்னைச் செய்திகள்

சென்னை சேத்துப்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் ஆறுமுகம். இவர் நேற்று மதியம் சென்னை அமைந்தகரை பகுதியில் தனது நண்பருடன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு பைக்கில் வந்த சிலர் ஆறுமுத்தை வழிமறித்தனர். அந்த மர்மநபர்கள் மறைத்துவைத்திருந்த அரிவால் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் அவரை சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து பைக்கில் தப்பித்து ஓடினர்.

இந்த தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார், உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த ஆறுமுகத்தை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர். அவரின் தலையில் பலமாக வெட்டப்பட்டிருந்தது. இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி ஆறுமுகம் உயிரிழந்தார். உயிரிழந்த ஆறுமுகத்தின் மீது, ஆயுத தடை சட்டம் உள்ளிட்ட ஐந்து வழக்குகள் நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Source: https://www.vikatan.com/news/crime/article-about-brutal-murder-of-a-man-in-chennai-by-a-gang