சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் – ஒருவர் கைது – Puthiya Thalaimurai

சென்னைச் செய்திகள்

சென்னை விமான நிலையம் மற்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை போலீசார் கைது செய்தனர்.

சென்னை விமான நிலையம் மற்றும் முதலமைச்சர் ஸ்டாலின் வீடுகளில் வெடிகுண்டு வைத்து இருப்பதாகவும், தகர்க்கப் போவதாகவும் காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு மிரட்டல் வந்தது. இதனையடுத்து மோப்ப நாய் உதவியுடன் வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று தீவிர சோதனை நடத்தியதில் அது புரளி என தெரியவந்தது.

image

Advertisement

இதையடுத்து மிரட்டல் விடுத்தது தொடர்பாக தேனாம்பேட்டை போலீசார் விசாரணை நடத்தினர். இதில், மிரட்டல் விடுத்த திருநெல்வேலி மாவட்டம் சுத்தமல்லி கிராமத்தைச் சேர்ந்த தாமரைக் கண்ணன் என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர். இதைத்தொடர்ந்து அவரிடம் நடத்திய விசாரணையில் கஞ்சா போதையில் மிரட்டல் விடுத்தது தெரியவந்தது. இதனையடுத்து தேனாம்பேட்டை போலீசார் அவரை கைது செய்தனர்.

Source: https://www.puthiyathalaimurai.com/newsview/138713/Chennai-Bomb-threat-to-Chief-Minister-Stalins-house-One-arrested