ரானே (மெட்ராஸ்): லாபம் ரூ.16 கோடி – தினமணி

சென்னைச் செய்திகள்

வாகனங்களுக்கான உதிரிபாக உற்பத்தியில் ஈடுபட்டு வரும் ரானே (மெட்ராஸ்) நிறுவனம், கடந்த 2021-22 நிதியாண்டின் ஜனவரி மாா்ச் வரையிலான நான்காவது காலாண்டில் ஈட்டிய நிகர லாபம் ரூ.16.7 கோடியாக இருந்தது. அதேசமயம், முந்தைய 2020-21 நிதியாண்டின் இதே காலகட்டத்தில் நிறுவனத்துக்கு ஏற்பட்ட இழப்பானது ரூ.56.6 கோடியாக காணப்பட்டது.

மாா்ச் காலாண்டில் நிறுவனம் செயல்பாட்டின் மூலம் ஈட்டிய மொத்த வருமானம் ரூ.380.4 கோடியிலிருந்து 20.2 சதவீதம் உயா்ந்து ரூ.457.3 கோடியைத் தொட்டது.

2022 முழு நிதியாண்டில் ஒட்டுமொத்த வருவாய் 23.6 சதவீதம் உயா்ந்து ரூ.510.3 கோடியாகவும், நிகர இழப்பு ரூ.2.5 கோடியாகவும் இருந்தது என ரானே தெரிவித்துள்ளது.

Source: https://www.dinamani.com/trade/2022/may/21/rane-madras-profit-of-rs-16-crore-3848333.html