சென்னை – திருப்பதி ரயில் 6 நாள்கள் ரத்து: சில புறநகர் ரயில்களும் இன்று இயங்கவில்லை – தினமணி

சென்னைச் செய்திகள்

சென்னை ரயில்வே கோட்டத்திற்கு உள்பட்ட பகுதிகளில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் பல்வேறு ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.

சென்னை – திருப்பதி ரயில்

நாள்தோறும் பகல் 2.15க்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து புறப்படும் திருப்பதி விரைவு ரயில் இன்று, நாளை, மே 31, ஜூன் 1, 7, 8 ஆகிய தேதிகளில் ரத்து செய்யப்படுகிறது.

காலை 10.10-க்கு திருப்பதியிலிருந்து புறப்பட்டு சென்னை சென்ட்ரல் வரும் விரைவு ரயில் இன்று, நாளை, மே 31, ஜூன் 1, 7, 8 ஆகிய தேதிகளில் ரத்து செய்யப்படுகிறது.

நெல்லூர் – சூலூர்பேட்டை ரயில்

நெல்லூரிலிருந்து காலை 10.15க்கு புறப்பட்டு சூலூர்பேட்டை செல்லும் புறநகர் ரயில்(06746) இன்று ரத்து செய்யப்படுகிறது.

அதேபோல, சூலூர்பேட்டையிலிருந்து காலை 7.50க்கு புறப்பட்டு நெல்லூர் செல்லும் புறநகர் ரயில்(06745) இன்று ரத்து செய்யப்படுகிறது.

சூலூர்பேட்டை – சென்னை சென்ட்ரல் ரயில்

சூலூர்பேட்டையிலிருந்து பகல் 12.35-க்கு புறப்பட்டு சென்னை சென்ட்ரல் செல்லும் புறநகர் ரயில்(06742) இன்று ரத்து செய்யப்படுகிறது.

ஆவடி – சென்னை சென்ட்ரல் ரயில்

ஆவடியிலிருந்து சென்னை அதிகாலை 4.25க்கு புறப்பட்டு சென்னை சென்ட்ரல் செல்லும் புறநகர் ரயிலும் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதையும் படிக்க |  9 முக்கிய ரயில்களின் பகுதி சேவை ரத்து: மாற்றுப் பாதையில் சில ரயில்கள்(முழு விவரம்)

Source: https://www.dinamani.com/tamilnadu/2022/may/24/train-serveice-change-some-trains-cancelled-3849903.html